உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

கண்டதும் கேட்டதும் :

ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் கருவூரை முற்றுகை ட்டிருந்த கிள்ளி வளவனிடம் சென்றார். அடைத்து உள்ளே இருப்பவனிடம் போய் ஆவது என்ன? புலவர் கிள்ளியை நெருங்கும் போது, வீரர்கள் கருவூருக்கு அருகில் இருந்த சேரனது காவல் மரங்களை வெட்டி வீழ்த்தினர். அதனைக் காண்டார். வெட்டும் ஒலி சேரனது மதிலில் மோதி எதிரொலி செய்தது. அதனைக் கேட்டார். கருவூரை ஒட்டி ஓடும் ஆன் பொருநை ஆற்றின் மணல்மேடுகளில் இருந்து விளையாடும் இளமகளிர் அஞ்சி ஓடுவதைக் கண்டார். அவர்கள் அரற்றுதலைக் கேட்டார். அரசன் கிள்ளியினிடம் பேசத் தொடங்கினார்.

புலவர் பொருளுரை:

"அரசே! நீ உன் பகையரசனைக் கொல்லக் கருதினால் கொல்க! கொல்லாது விடக்கருதினால் விடுக! ஆனால் உனக்குப் பெருமையாவது எது என்பதை மட்டும் எண்ணிப்பார்! இளமகளிர் இருந்து விளையாடும் ஆன்பொருநை ஆற்று மணல் திட்டைகள் சிதைகின்றன; அருகில் உள்ள காக்களில் இருக்கும் காவல் மரங்கள் கோடரியால் வெட்டப்படுகின்றன. இவற்றை எண்ணாமல் அரணுக்குள் இனிது அமைந்து கிடக்கும் ஆற்றலிலா அரசனுடன் அமர் புரிந்தார் என்பது நாணுதற்கு உரியது!" என்றார்.

“பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின் அறம்நாணத் தக்க துடைத்து”

என்பது அறவோர் உரை. இதனைத் தானே அறியாமல் போயினும் அறிந்த ஒருவர் உரைக்கும் போதாவது கேட்டுப் போற்றி ஒழுக வேண்டும். போற்றி ஒழுகினான் கிள்ளிவளவன். போர் மூட்டம் கலைந்தது. புலவர், புகழுக்கு உரியவர் ஆனார்.

ஒரு குடியில் கொடும்பகை :

சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும், ஒரு குடிப் பிறந்தவர்கள். ஆனால் ஒன்று பட்டு வாழ்ந்தார் இலர். நலங்கிள்ளி நெடுங்கிள்ளியைத் தாக்க முனைந்தான். நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டையின் மதிலை அடைத்துக் கொண்டு உள்ளே இருந்தான். தாக்குதல் வலுக்கவே, ஆங்கிருந்து ஓடி உறையூர்க் கோட்டையின் உள்ளே புகுந்து கதவை மூடிக்கொண்டான். அவன் நிலைமை