உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

121

"நான் மிகச்செல்லமாக வளர்க்கப் பெற்றேன். என் தந்தையாரின் அரண்மனைத் தோட்டத்திலே வெண்டாமரைப் பொய்கையும், செந்தாமரைப் பொய்கையும், குவளைப் பொய்கையும் எனக்காக அமைக்கப் பெற்றன. காசிச்சந்தனம் தவிர்த்துப் பிறிதொரு சந்தனத்தைப் பூசி அறியேன். காசிப்பட்டன்றிப் பிறிதொன்றைக் கட்டி அறியேன். வெயிலும், மழையும், தூசியும் என்னைத் தொடாவண்ணம் என் ஏவலர்கள் இராப் பகலாகக் குடை பிடித்திருந்தனர்.

(4

"இளவேனில்

காலத்திற்கெனவும், மழைக்காலத்திற் கெனவும், பனிக்காலத்திற்கெனவும், மூன்று மாளிகைகள் எனக்காகக் கட்டப்பெற்றிருந்தன. மழைக்காலத்தில் நான் என் அரண்மனையில் இருந்து கீழே இறங்கி வந்ததே இல்லை. எப்பொழுதும் பேரழகியர் ஆடியும் பாடியும் இரவும் பகலும் என்னை இன்புறுத்தினர்.

கவலையில் கௌதமர்:

இத்தகைய இன்பவாழ்வு வாழ்ந்த பெருமகனார் தாம் ஒருநாள் உலகத்தின் துன்பங்களைக் கண்டு கண்டு கண்ணீர் பெருக்கினார். முதுமைத் துயர், பிணித் துயர், இறப்புக் கொடுமை

வை வட்டமிடும் உயிர்களின் வாழ்வைக் கண்டும் கேட்டும் நொந்தார். உயிர்கள் படும் துன்பத்தை ஒழித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்து இளஞ் செல்வனையும், இனிய மனைவியையும் தம் இருபத்தொன்பதாம் அகவையில் பிரிந்து வெளியேறினார். உயிர்களின் துயரை ஒழிக்கப் பிறந்த அப்பெருமகனார் பட்ட துன்பங்கட்கு அளவில்லை. 'துன்பமே வா' என்று புன்முறு வலுடன் மலைபோல் நின்று எதிர் கொண்டு வரவேற்றார். ஆறு ஆண்டுகள்:

ஆறு ஆண்டுகள் அயராமல் அலைந்தார். காடு, மலை, வெயில், மழை, பனி, பசி எவற்றையும் பொருட்டாக எண்ணாமல் திரிந்தார்; வயிற்றில் விரலை வைத்தால் முதுகெலும்பும், முதுகில் விரலை வைத்தால் வயிற்றின் தோலும் தட்டக்கூடிய அளவுக்குப் பட்டினி கிடந்து மெலிந்தார்; ஒரு சமயம் நாற்பத்தொன்பது நாட்கள் உண்ணா நோன்பு கொண்டார்; எவராலும் வளைக்க இயலாது எனக் கருதப்பட்ட வில்லை எளிமையாக வளைத்து மன்னர் குமரர்கள் நாணித் தலை குனிய நிமிர்ந்து நின்ற வீரர் கௌதமர், இப்பொழுது பல இடங்களில் உணர்வின்றி மயங்கிக் கீழே வீழ்ந்தார்; தலையிலும், முகத்திலும் காடுபோல் வளர்ந்து கிடந்த மயிர்களைத் தம் கையாலேயே குருதி ஒழுகப் பிடுங்கித்