உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

வழிநடை :

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

மழைக்காலம்; சேறும் வதியும் அமைந்த வழி! இடுக்கமான பாதை; குளிர்க்கொடுமை; மையிருட்டு - இவற்றின் இடையே பயணம் நடக்கின்றது. மரியன்னை நிறை கருப்பம் எய்தி யிருந்தார்; ஆதலால் அவர் ஒரு கழுதையின் மேல் இருந்து பயணம் செய்கிறார்! அதனை நடத்திக் கொண்டு செல்கிறார் சூசையப்பர்.

ஐந்து நாட்கள் நடந்து பெத்லகேம் நகரை அடைந்தனர். ஆனால் அவர்கள் தங்குவதற்கு ஓர் இடமும் கிடைக்கவில்லை. முன்னரே அங்கு வந்த செல்வர்கள் அனைவரும் வீடுகளை அமர்த்திக் கொண்டனர். தேடித்தேடி அலுத்ததை அல்லாமல் அவர்கட்கு வீடு கிடைக்கவில்லை. "நரிகளுக்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மனித குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை" என்று இயேசுபெருமான் பின்னர்க் கூற இருப்பது மெய்யாயிற்று.

குகையில் குமரன்:

ஊருக்கு வெளியே இருந்த ஒரு மலைக் குகையே அவர்கள் இருப்பிடம் ஆயிற்று. அதன் உள்ளே நுழைந்தபோது தான் அதனை மாட்டுத் தொழுவமாகப் பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்தனர். சுவரும், தளமும் ஈரக்கசிவு உடையவையாக இருந்தன. ஆங்குத் தான் உலகை உய்விக்க வந்த பெருமான் பிறந்தார்.

ஒரே ஓட்டம் :

பழந்துணியில் எடுத்து வைக்கோல் மேல் குழந்தையைப் படுக்கவைத்தனர் பெற்றோர். அங்கு நின்ற மாடுகளின் வெப்ப மூச்சுச் சற்றே குழந்தையின் குளிரைப் போக்கத் துணையாயிற்று. அங்கேயாவது சில நாட்கள் அமைதியாக இருக்க முடிந்ததா? எரோதன் என்னும் வேந்தன் இயேசுக் குழந்தையைக் கொல்வ தற்காக அந்நாட்டில் பிறந்திருக்கும் குழந்தைகள் அனைவரையுமே கொன்று தீர்த்தான் பாவி எரோதன்! ஏனெனில் இயேசு வெட்டப் படாமல் தப்பிவிடக் கூடாது அல்லவா!

தொண்டின் தொடக்கம்:

குழந்தை இயேசு ஊர்க் குழந்தைகளைக் கூட்டி வைத்துச் சொல்கிறார். “நான் ஏழையாக இருப்பதைப் பார்த்து உங்களுக்குள் ஏழைகளாக இருப்பவர்கள் ஆறுதல் அடைய மாட்டீர்களா? நல்ல