உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

131

நிலையில் இருப்பவர்கள் என்னைப் போலும் ஏழ்மை நிலையில் இருப்போர்க்கு உதவமாட்டீர்களா? யான் என் பெற்றோர்க்குப் பணிந்து நடப்பது போல் நீங்களும் உங்கள் பெற்றோர்க்குப் பணிந்து நடக்க மாட்டீர்களா? பெருமான் தம் பிறவித்தொண்டைத் தொடங்கிவிட்டார். சொல்லளவில் நிற்காமல் செயலில் நிலைத்தார்.

1

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்”

என்பது வள்ளுவர் வாய்மொழி.

முப்பதும் மூன்றும் :

முப்பதாம் அகவை இயேசுவுக்கு எய்தியது. அதுவரை, தாம் செய்துவந்த தச்சு வேலையை விடுத்து உலகத் தொண்டிலே ஈடுபட்டார். இருந்த குடிசைக்கு முழுக்குப் போட்டுவிட்டுத் திறந்த வானத்தின் கீழே வந்துவிட்டார். முந்நூறு ஆண்டுகள் வாழ்ந் தாலும் முயன்று ஆற்ற முடியாத தொண்டுகளை மூன்றே ஆண்டு களில் செய்தார்.

உண்ணா உணவு:

தொண்டிலே இறங்குமுன் நாற்பது நாட்கள் உண்ணாமலும், பருகாமலும் இருந்தார். வெயில், மழை, காற்று, பசி அனைத்தையும் பொருட்படுத்தாத உரம் பெற்றார். உண்ண வேண்டும் என்று இயேசுவை அவர்கள் சீடர்கள் வேண்டு கின்றனர். அப்பொழுது "இறைவனுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்வதே எனக்கு உணவாக இருக்கிறது" என்றார். இத்தகைய ஊற்றம் எங்கிருந்து வந்தது? தொண்டு செய்ய நினைவார் 'தொட்டாற் சுருங்கியாக' இருந்தால் என்ன பயன்? பெரும் பேறு:

உயரிய தொண்டன் யோவான். இயேசு பெருமானுக்கு 'ஞான முழுக்கு' வழங்கியவன், அவன் இயேசுவின் தொண்டுக்கு வழி அமைத்துக் கொடுத்தவன் எனலாம். அவன் தலையைக் கொய்து கொண்டு வந்து ஒரு நாட்டியத்திற்குப் பரிசாக வழங்குகிறான் காவலன் என்னும் போர்வைக்குள் மறைத்திருந்த

1. திருக்குறள் : 664.