உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

கயவன் எரோதன். 'உலகத் தொண்டில் இறங்கினால் உமக்கு விளையப்போவது இதுவே' என்பதைச் சொல்விக் காட்டுவது போல் அமைந்த நிகழ்ச்சி இது. எனினும் உலக அமைதி நாடிவந்த பெருமான் இயேசுவின் உள்ளம் இதற்காக அசைந்து விடவில்லை, "நீதியின் நிமித்தமாகத் துன்பப்படுகிறவர்கள் பேறு பெற்றவர்கள், ஏனெனில் பேரின்ப உலகம் அவர்களுடையது" என்பது அவர்தம் திருவாய் மொழி.

மருத்துவ மன்னர்:

பிறர் துயர் துடைத்தற்காகவே பிறந்தவர் இயேசு. பிறரொருவர் எய்திய எத்துயர்களையும் போக்குதல் தம் கடன் எனக் கொண்டார். ஆண்டவன் பெயராலேயே அவற்றை நீக்கினார்; திமிர்வாதம் பிடித்தவர்.தொழு நோயாளர், குருடர், முடவர் ஆகிய எத்துணையோ பேர்களின் நோய்களை நீக்கினார். அவரைத் தேடிக்கொண்டு மக்கள் திரள் திரளாக வந்தனர். ஒதுக்கப்பட்டவர், ஒடுக்கப் பட்டவர் என்று பாராமல், செல்வர், ஏழை எண்ணாமல், தம் இனத்தார் வேற்றினத்தார் என்று கருதாமல் எல்லாருக்கும் அருள் மழை பொழிந்தார். கூட்டத்தைக் கடந்து வீட்டின் வாயில் வழியாக வரமுடியாமல் கூரையைப் பிரித்துக் கொண்டும்கூட நோயாளர்களைக் கொண்டு வந்து குணப்படுத்திச் சென்றார்கள். அவர் உடற்பிணி மருத்துவராக இருந்தமை, பலர் வாழ்வைப் பசுமையும், வளமும் உடையதாக மாற்றியது. பாலைவனத்தைச் சோலைவனமாகவும், கட்டாந்தரையைக் கழனியாகவும் மாற்றியது போல் இருந்தது. அன்றியும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தால் கூட, கோடி கோடி மக்கட்குப் பற்றும் உயிர் நோய்க்கு மருந்து போன்ற அருள் மொழிகளை வழங்கிய திறம் இருக்கிறதே அஃது ணையற்றது.

நன்மைக்கு நாளில்லை:

'இயேசு பெருமான் பிறந்து வளர்ந்த நாளில் நாம் இருந்தோம் ல்லையே' என்று பின்னுள்ளோர் வருந்தும் அளவுக்கு அறவுரைகள் வழங்கினார். ஓய்வு ஒழிவு என்பதே இல்லாமல் உழைத்தார். ஓய்வு நாளிலும் நற்றொண்டு ஆற்றினார். அடியார் களில் சிலர்கூட அவர் ஓய்வு நாளில் செய்யும் தொண்டுகளை வெறுத்தனர். அதற்கு அந்தப் பொறுமைப் பிழம்பு “உங்களில் எந்த ஒருவனுக்காவது ஓர் ஆடு இருந்து அஃது ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கிவிட மாட்டீர்களா?