உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

அறையும் போதாவது அண்ணல் அலறினாரா? அடிப்பவரைப் பழித்தாரா? ஏவினோரை இழித்துரைத்தாரா?

இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் வேளையில் உடன் இருந்த ஒருவன் சினங்கொண்டு தலைமைக் குருவின் ஊழியன் காதை வெட்டி விடுகின்றான். அப்பொழுது 'இம்மட்டில் நிறுத்து' என்று தடுத்து அக் காதைச் சரிசெய்கிறார். அவ்வாறு பிறர் துயர் காணப் பொறாத அப்பேரருள் உள்ளம் தம்மைச் சிலுவையில் அறையுங்கால் பிறரைக் குறை கூறவும் விழைய வில்லை. “தந்தையே! இவர்களைப் பொறுத்தருளும்; தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்" என்று பரிந்து வேண்டுகிறார். மண் சுருங்க-விண் சுருங்க-வளர்ந்த அருள் இது! நம் வேண்டுதல்:

இயேசு பெருமான் செய்த அமைதிப் பணி ஈடும் எடுப்பும் அற்றது. அதனை அக்கால உலகம் அறிந்து கொள்ளவில்லை. க்கால உலகமும் அறியவில்லை. அறிந்தும் அறியாச் செவிடாகச் செல்லவும் தயங்கவில்லை. செவ்வையாக அறிந்து அவ் வழிச் செல்லும் அசைவற்ற எண்ணம் இருந்தால், ஒரு கையில் அவர் திருமறையை வைத்துக் கொண்டு மற்றொரு கையிலே அணுக் குண்டுகளையும், நீர்வளிக் குண்டுகளையும் வைத்துக் கொண்டு பேய்ச் சிரிப்புச் சிரிக்க வேண்டிய நிலைமை இருக்கவே இருக்காது. நாமும் இயேசு பெருமானிடம் “திருக்குமரனே! இவர்களைப் பொருத்தருளுமாறு தந்தையினிடம் வேண்டும்" என வேண்டலாம். ஆனால் உலகப் போர் என்னும் பேரிடி விழுந்தால் யார் ஒருவர் இவ்வாறு வேண்டுதற்காக இருக்கப் போகிறார்?