உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

வீட்டுத்தலைவர் கொண்ட வறுமை வீட்டைச் சூழாமல் விட்டு வைக்குமா? முகம்மது வறுமையையே இனிப்புப் பண்டமாகக் கொண்டு வாழ்ந்தார்!

இளைஞர் இயக்கம் :

இளைஞர் முகம்மது வாய்மைக்கு உறைவிடமாகவும், நேர்மைக்குப் புகலிடமாகவும் திகழ்ந்தார். இளமையிலேயே தொண்டுள்ளம் துலக்கமாக வெளியாயிற்று. ஏழைகளின் இன்னல் களை ஒழிக்கவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவவும் கருதி ஓர் இளைஞர் இயக்கம் அந்நாளில் தொடங்கியது. அவ்வியக்கத்தின் உறுப்பினர் ஆனார் முகம்மது. பின்னர் அதன் உயிரோட்ட மாகவே திகழ்ந்தார்.

கஃபா கல்:

வெள்ளம் பெருக்கெடுத்து வந்து கஃபா என்னும் கோவில் சுவர்களை இடித்துத் தள்ளியது. அதனைக் கட்டும் பணியில் மக்கமா நகரார் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு பணி செய்தனர். ஆனால், திடுமென ஒரு திருப்பம் உண்டாயிற்று. வேலையே தடைப்பட்டு நின்றுவிட்டது!

.

கோவில் சுவரில் மூலையில் இருந்தது புனிதமான ஒரு கல். அக்கல்லைத் தூக்கி வைக்கும் உரிமை யாருக்கு உரியது? என்பது ஒவ்வொருவரும் கேட்ட வினாவாக இருந்தது. 'இவர்' 'அவர்' என்றும் ‘எமக்கு,' 'எமக்கு' என்றும் பலதிறப்பட்ட கூச்சல்கள் கிளம்பின. பெரும் தலைவர்கள் ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக் கொண்டனர். பிரிந்து நின்று பிணங்கினர். பின்னர்ப் பொது வேலை நடைபெறுமா?

தெய்வச் செயலால் இதனைத் தீர்த்து வைக்கும் கடமை முகம்மது அவர்கட்கு ஏற்படுகின்றது. முகம்மது என்ன நீதி வழங்கினார்? அமைதி அறம் காக்கவே வந்த அண்ணல் முகம்மது செய்த முடிவு போற்றத் தக்கதாக இருந்தது. பகைத்து நின்றோரும் பாராட்ட அவர்தம் தீர்ப்பு இருந்தது.

தெளிந்த தீர்ப்பு :

தம் மேலாடையைக் கீழே விரித்தார். அப்புனிதக் கல்லை அவ்வாடைமேல் புரட்டினார். பற்பல குழுக்களின் தலைவர் களையும் அழைத்து நான்கு பக்கங்களிலும் நின்று ஆடையைத் தூக்கச் செய்தார். அக்கல்லைத் தம் கையால் எடுத்து உரிய