உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}

அறவோர் அமைதிப் பணிகள்

145

"பொறுத்திருங்கள்; உறுதியாக நான் பொறுமையோடு காத்திருப்பவர்களுடன் இருக்கிறேன்

துன்பம் செய்யப்படுவதைப் பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் அது பெருஞ் சிறப்பாகும்"

"நன்மையும் தீமையும் ஒப்பாக இருக்க முடியா. எவரேனும் உங்கட்குத் தீமை செய்தால் அந்தத் தீமைக்குப் பதில் நன்மை செய்யுங்கள். நீங்கள் அவ்வாறு செய்வீர்களானால் எவருடன் உங்களுக்குப் பகை இருந்ததோ அவர் உங்களுடைய ய உண்மையான நண்பராகி விடுவதை நீங்கள் காண்பீர்கள். ஆனால், பொறுமையில் நிலையாக இருப்பவரே இதை அடைய முடியும். மேலான அருள் பெற்றார் அன்றிப் பிறர் எவரும் இந்த நிலைமையை எட்ட முடியாது.

"நீங்கள் பழி வாங்குவீர்களானால் எந்த அளவில் எந்த முறையில் உங்களுக்குத் தீங்கு செய்யப்பட்டதோ அந்த அளவில் கூடாமலும் குறையாமலும் பழிவாங்க வேண்டும். ஆனால் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்துப் பழி வாங்காமல் இருந்து விட்டால், மன்னிப்போருக்கு மன்னிப்பினால் கிட்டும் நன்மை உண்டு.

"தீமையை எவர் மன்னித்து விட்டார்களோ, கேடு செய்யாமல் நலம் செய்துவிட்டார்களோ அவர்களுக்கு அவற்றுக்குரிய நன்மை அல்லாவினிடம் உண்டு.

"நன்மையைப் போதிப்பாயாக!

தீமையை விலக்குவாயாக!"

இத்தகைய நன் மொழிகளை மழைபோல் பொழிந்து தீமையை விலக்கினார் நபிகள். தமக்கென ஒரு சிறு பொருளையும் வைத்துக் கொள்ளாமல் பெருவள்ளலாக வாழ்ந்தார். தம் மனைவியார் சிறிய அளவில் வைத்திருந்த வெள்ளியையும் ஏழையர்க்கு வழங்கிவிட ஆணையிட்டார்! தம் பணிகளை இனிது நிறைவேற்றிய போது உலக வாழ்வில் இருந்து விடுதலை பெற்றுக் கொண்டார். அதன் பின்னர், அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடங்கள் புனித இடங்களாகக் கருதப்பெற்று உலகோர் உள்ளங் களில் இடம்பெற்றுச் சிறப்படைந்துள்ளன!

1. குர்-ஆன்.