உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

எவருக்குத் துணை?

"அமைதி வழியிலேயே எந்த ஒன்றையும் தீர்க்க வேண்டும்; தீமைக்கும் நன்மை செய்ய வேண்டும்; பிறருக்கு நாம் ஊறு செய்யும் போது இறைவன் நமக்கு ஊறு செய்வான்' என்பன போன்ற நன்மொழிகளைப் பரப்பிய நபிகளின் வழியிலே உண்மையாகச் செல்வதாக இருந்தால் செல்பவர்கள் எத்தகையராக இருத்தல் வேண்டும்? அவர்கள் வாழும் நாடு எத்தகையதாக இருக்க வேண்டும்? வன்முறையால் பிறநாட்டைத் தாக்க முற்படுமா? பொருந்தாப் பூசல்களை விளைத்துப் போருக்கு முந்துமா? முந்துமாயின் நபிகளின் நல்லருளும் அல்லாவின் துணையும் தாக்கப்பட்டோருக்கு உண்டேயன்றித்தாக்குவோருக்கு இருக்க முடியாது அல்லவா!