உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அருட் பெரு மக்கள்

சிறைக்கோட்டமே அறக்கோட்டம்!:

கோவலன் கொடுங் கொலைக்கு ஆட்படத் துறவு கொண்டனர் மாதவியும் மணிமேகலையும். துறவில் புகுந்த மணிமேகலை செய்த தொண்டுகள் அருமை வாய்ந்தன. இந்நாளில் வாழ்வாரும் போற்றித் தலைமேல் கொள்ளத்தக்கன

"கொடைகளில் எல்லாம் உயர்ந்தது உணவுக் கொடையே. ஏனெனில் உணவுக்கொடையே உயிர்க் கொடையாக இருக்கிறது" என்பதை உணர்ந்தார் மணிமேகலையார். ஆகவே தம் கையகத் திருந்த அமுதசுரபியில் இருந்து,

1 “காணார் கேளார் கால்முடம் ஆனோர் பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் படிவ நோன்பிகள் பசிநோய் உற்றோர் மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும் பன்னூ றாயிரம் விலங்கின் தொகுதியும் மன்னுயிர் அடங்கலும் வந்தொருங் கீண்டி”

அமுது பெற்றுய்யஉதவினார். சிறைக் கோட்டம் சென்று ஆங்கு அல்லல் உறுவோரைத் தேற்றி அமுது வழங்கினார். சோழ வேந்தனிடம் சென்று அறங்கள் பலவற்றை எடுத்துரைத்துச் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றி அமைத்தார். அப்பணியாலும், இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் நயத்தாலும் சீரிளம் பருவத்திலேயே செந்தண்மையாளர்கள் அனைவரும் பாராட்டும் சீருற்றார்.

அப்பர் அறப்பணி:

அமைதிப் பணியில் தலைநின்ற அருட்பெரு மக்களுள் ஒருவர் அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பெருமான். அவர் தம் வாழ்வின் முழுநிறை நோக்கத்தை,

1. மணிமேகலை.