உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

முடிக்க வந்தாலும் – உயிர்

மடிக்க வந்தாலும் -நீ

ஒருவர் மேலும் குறைகூறாதே”

"மற்றவர் தாம் செய்யினும் பெருந்தீங்கு - அதை மனத்திற் கொள்ளா திருப்பதே பாங்கு - குற்றமாகிய வழிதனை நீங்கு”

151

என்று தாம்பாடிய சர்வசமய சமரசக் கீர்த்தனையில் பாடுகின்றார். 2 "எப்பிழைக்காக நீ பிறரைச் சினந்தாயோ, அப்பிழையை நீ செய்த தில்லையா? உன்னைப் போல் அவர்கள் பிழை செய்தால் ஆகாதா?" என்று இடித்துக் கேட்டுப் பிழை செய்வார் மேல் பரிவு காட்டித் திருத்த வகை செய்கிறார் வேதநாயகர்.

வேதநாயகர் மயிலாடுதுறை என்னும் மாயூரத்தில் நடுவராக இருந்தபோது அங்குப் பெரும் பஞ்சம் நிலவிற்று. அதனை ஒழிப்பதற்குப் பெரும்பாடு பட்டார். தம் பெருவளத் தையும் அருளாளர் பேருளத்தையும் பயன்படுத்திப் பல்லாயிரம் பேர்களின் பசித்துயர் போக்கினார். சொல்லும் செயலும் ஒன்றுபட்டுத் தொண்டாற்றிய வேதநாயகர் ஊரார் புகழுக்கு உரியவர் ஆனார். ஆல்பிரட் சுவைட்சர் அன்புநெறி:

அனைத்துலகும் அறிந்த ஆல்பிரைட் சுவைட்சரை அறியார் எவர்? அவர் உலகோர் உள்ளத்தில் உறைவதற்குக் காரணம் என்ன? உயிர்கள் மாட்டு அவர் கொண்ட அருள் ஒன்றால், புகழ் விழையா அவரை உலகப் புகழ் சூழ்ந்து வளைக்கின்றது.

"மூச்சு விடுகின்ற எல்லா உயிர்களையும் இறைவன் காத்தருள் வானாக; அவை அமைதியுடன் உறங்கட்டும்" என்று இறைவனை வேண்டும் அவர்தம் பிள்ளைச் சிறு விண்ணப்பத்தில் அமைந்துள்ள அருட்பெருக்குத்தான் எத்தகையது!

நீக்ரோ மக்கள் நோயால் மாண்டு மடிகிறார்கள் என்று கேள்விப்பட்டார் சுவைட்சர். செர்மன் குடிமகனாராகப் பிறந்து, பிரேஞ்சு குடிமகனாராக வளர்ந்த சுவைட்சர் தம் மனைவியோடு ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். மருத்துவமனைகளைத் தம் கையாலேயே கட்டினார். அவர் மனைவியார் துணை நின்றார்.

2.நீதிநூல்: 31:1.