உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

உலகில் உயிர்கள் படும் வருத்தத்தை அவரால் ஒரு நொடி யளவும் காணமுடியவில்லை; ஒரு நொடியளவும் கேட்கமுடிய வில்லை. வாடிய பயிரைக் கண்டும் வருந்தினார்; வீடுதோறும் இரந்து திரியும் ஏழையரைக் கண்டு கசிந்து அழுதார்! வருந்தி நின்றதால் ஆவது என்ன? கண்ணீர் வடித்து நிற்பதால்தான் ஆவது

என்ன?

அறச்சாலை நிறுவினார்; தண்ணீர்ப் பந்தல் அமைத்தார்; மருத்துவமனை கட்டினார்; பள்ளிச் சாலை உண்டாக்கினார். மண்கட்டியை உடைப்பதைக் கண்டுகூட அவர் மனம் மருகி நிற்பார்' எனில் உயிர்களின் துயரத்தைப் போக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளை உரைப்பது அரிது.

அடிகள், தீயவர்களைத் திருத்துவதற்காக ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதில் அருள் வழிந்து ஒழுகுவதைக் காணலாம்.

என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படி இருந்தாலும் அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்; தெண்டன் விழுந்து சொல்லுவேன்; பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்; இப்படி எந்த விதத்திலே யாவது நல்வழிக்கு வரச் செய்துவிடுவேன்; நீங்கள் எல்லாரும் இப்படியே செய்தல் வேண்டும்.'

வேதநாயகர் வியன்நெறி:

வடலூர் வள்ளல் சமரச சன்மார்க்கத் தந்தையாகத் திகழ்ந்தார். அவரைப் போலவே குளத்தூர் வேத நாயகர் அவர்களும் சர்வ சமயமும் சமரசம் எய்த வேண்டும் என்று பெரிதும் விழைந்தார். கிறித்தவ நெறியிலே நின்றவர் வேதநாயகர். உயிர்கள் அனைத்தும் இறைவன் இனிய கொடையே என்பதையும், எல்லா உயிர்க்கும் இன்பம் செய்தலே மாந்தர் கடமை என்பதையும் மறவாமல் போற்றினார்.

1.66

"துன்பம் என்ப தெவர்க்கும் சுதந்திரமே - அதைத் தொலைப்பதற் குண்டோ ஒருதந்திரமே இன்பம் உற்றவர் எவர் நிரந்தரமே - பிறர் இடிக்க வந்தாலும் - கட்டி

அடிக்க வந்தாலும் – பழி

1. சர்வ சமய சமரசக் கீர்த்தனை : 171.