உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

149

செயலாக அவருக்குத் தோன்றியது. 'கொல்லா விரதம்' பற்றிய அவ்வடிகளின் தனி மொழிகள் தலைமேல் கொள்ளத்தக்கன. கடவுளைக் கருணாகரன் ஆகவும், இன்பக் கடலாகவும் கண்டார் அவர்.

'அன்பர் பணி செய்ய வேண்டும்' என்று தாயுமானவர் துடித்தார். பிறவியை வெறுத்த அப் பெருமான், 'அன்பர் பணி செய்வதற்காக ஆயிரம் பிறவி எடுத்தலும் வேண்டும்' என்று வேண்டினார். கொலைக் கொடுமையை ஒழிப்பவரே நல்லவர் என்று நயந்தார். அதனைச் செய்யாதவர் பெயரைச் சொல்லவும் நாணினார்.

எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே" என்றும்

"எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே”

என்றும் விரும்பிக் கூறும் அன்னார் அமைதிப் பணிகள் நினைவு கூரத் தக்கன.

வள்ளலார் வளர்நெறி:

தாயுமானவ அடிகள் சொல்லறத்தை நல்லறமாக நாட்டிய பெருந்தகை இராமலிங்க அடிகள். சமயப் பணியை அறப் பணியாக மாற்றியமைத்த பெருமைக் குரியவரும் இராமலிங்க அடிகளே ஆவர்.

CC

அடிகளார் கண்டது சமயநெறி அன்று. அதனினும் உயர்ந்த சமயப் பொது நெறியாகும். அந் நெறியிலே சமயவெறி இல்லை; சாதிப் பிணக்கு இல்லை; இனக் காழ்ப்பு இல்லை, கடலை அடையும் ஆறுகளைப்போல், கடவுளை அடைதற் குரிய பல வழிகளே சமயங்கள்" என்பது அவர் தெளிவு.

இராமலிங்க அடிகள் வடலூர் வள்ளல் என்று வழங்கப் பெறுவார். கையால் காசினைத் தொடுதலையும் விலக்கிய அப் பெருந்தகை, எவ்வாறு வள்ளல் ஆனார்? அவரைப்போல் அருளையும் அறத்தையும் அமைதியையும் வாரி வாரி வழங்கினோர் மிகச் சிலரே! ஆதலால் வள்ளல்களில் வள்ளல் அவர்.