உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அரசியல் அறிஞர்கள்

அமைதிக்குப்

பாடுபட்ட

சங்கச்

சான்றோர்களை

அறிந்தோம்; சமயச் சான்றோர்களையும் அறிந்தோம். இனி அரசியல் அறிஞர்கள் சிலரைப் பற்றி அறிவோம்.

உலகத் தேர் :

அரசியல் அறிஞர்கள் உலகம் என்னும் தேரை இயக்கும் வலவன் போன்றவர்கள். அவர்கள் அமைதிப் பணியில் ஈடுபடுவது மிகச்சிறப்புடையதாகும். அவர்கள் பிறரைப்போல் அல்லாமல் நினைத்ததைத் தம் நாட்டளவில் செயல்படுத்த முடியும். கொண்ட கொள்கைகளைப் பிறநாடுகளில் பரப்புவதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கவும் முடியும்.

அசோகர் அரும்பணி:

புத்தர் பெருமானின் கோட்பாடுகள் இந்திய நாடு கடந்தும் பிறநாடுகளில் பரவின. அதற்குக் காரணமாக இருந்தவர் எவர்? பேரரசர் அசோகரே ஆவர்! உழைக்கும் உண்மைத் தொண்டர்கள் ஒருநாட்டுக்கு வேண்டும். அவ்வாறு இருப்பினும் அவர்களுக்கு உதவுவாரும் வேண்டும். ஒரு போரின் வெற்றி படைவீரர்களை மட்டும் பொறுத்ததாகாது. படைத்தலைவர் களையும் பொறுத்த ஒன்றாகும். இந்நெறி அமைதிப்போரைப் பொறுத்த அளவில் மட்டும் விலக்காகிவிட முடியாதே!

கலிங்கப்போர் முடிந்ததும் அசோகர் கருத்து அருளில் திரும்பியது; புத்தசமயத்தைப் பின்பற்றினார்; இனிமேல் எக் காரணம் கொண்டும் எவருடனும் போர் செய்வதில்லை என்று உறுதி செய்தார். நாட்டுக்கு ஆணை பிறப்பித்தார்; "உயிர்க்கொலை செய்வது கொடுமை; வேட்டையாடுவது குற்றம்"! பல்லாயிரம் தொண்டர்கள் செய்யவேண்டிய பணியை நல்லதோர் அறிக்கை நடத்தி விட்டது. ஆகவே, அமைதிப் பணியிலே அரசியல் அறிஞர்கள் நாட்டம் செலுத்துவதே நானிலத்தின் நற்காலமாகும்.