உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

அண்ணல் ஆபிரகாம் :

155

"அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருந்தும் அவற்றை அறவழிக்கு அன்றிப் பிறவழிக்குப் பயன்படுத்தாத ஒரே ஓர் அறிஞன் இக்கல்லறையில் உறங்குகின்றான்” என்று ஆபிரகாம் லிங்கன் கல்லறையிலே எழுதவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றார் ஓர் அறிஞர். அத்தகைய அறவோராகத் திகழ்ந்தார் ஆபிரகாம்.

அடிமை ஒழிப்பு:

நியூ ஆர்லியன்சு ஏலச் சந்தை ஒன்றில் நீக்ரோ அடிமைகளை ஏலம் விடுவதை இளம் பருவத்தில் காணுகிறார் லிங்கன். அன்று அதனைக் கண்டு கண்ணீர் வடித்த இரக்கம் தான் அவரை அயராமல் பாடுபடச் செய்து அமெரிக்கத் தலைவர் ஆக்கியது; அடிமை முறையை ஒழித்துக் கட்டவும் முடிவு செய்தது. எத்துணை எத்துணை மக்களின் இன்ப உரிமை வாழ்வு, அந்த ஒருவர் திருக்கை யெழுத்தால் உண்டாகியது! அந்த அருட்கொடையைத் தான் என்னென்று உரைப்பது!

ஆபிரகாம் அடிமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வர இருப்பதை அறிந்தவுடன் பிரிகின்றது தென்னாடு; தனி உரிமைக் கொடியைத் தூக்கிப் பிடிக்கின்றது; போரும் தொடங்குகின்றது. போர் முழக்கத்தின் இடையே அடிமை ஒழிப்புக் கையெழுத்தைப் போட்டு முடிக்கின்றார் லிங்கன். அதுவரை அவரைத் தழுவி நின்றோர்கூட வழுவிச் சென்று எதிர்க்கின்றனர். எனினும் எண்ணியதைத் திண்ணிதாக நிறைவேற்றுகின்றார் அண்ணல் ஆபிரகாம்.

இரட்டை விடுதலை :

உரிமை வழங்கிய தலைவருக்காக உயிரை வழங்கிப் போரிடவும் துணிந்து வருகின்றனர் நீக்ரோவர். வெற்றி முழக்கம் விண்ணைப் பிளக்கின்றது! இந்த வெற்றியிலே லிங்கனுக்கு மகிழ்ச்சி ல்லை. தென்னாட்டுக் கைதிகளையெல்லாம் அழிக்க வேண்டும் என்னும் வெறியிலே நிற்கின்றனர் வீரர். ஆபிரகாம், தளபதி கிராண்ட்! நீக்ரோவருக்கு விடுதலை தந்து நான் செய்ய வேண்டிய பணியை முடித்தேன். உம் அடியைப் பணிந்து நிற்கும் தென்னாட்டுவீரர்க்கு எத்தகைய விதிப்பாடும் இல்லாமல் விடுதலை தரும் அருட்செயலை நீர் செய்தல் வேண்டும். அவ்வாய்ப்பை