உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

171

தாம் மாறி மாறிப் பணி செய்யும் இடங்களுக்கெல்லாம் என்னை அழைத்தலும், விருந்தினனாக்கலும், சுற்றுலாக் கொண்டு மகிழ்வித்தலும் ஆகிய நோக்கில் தவறாது அழைக்கின்றனர்; தொடர்கின்றனர். மும்முறை இவ்வகையால் சுற்றுச் செல்ல வாய்த்தது.

முதற் செலவு கோல்கத்தா (கோனார்க்கு, போல்பூர், சாந்திநிகேதன் முதலியன) இரண்டாம் செலவு, சம்மு (காசுமீரம், பனிமலை, தில்லி, ஆக்ரா, தேராதூன். இரிசிகேசம் முதலியன) மூன்றாம் செலவு நாசிக்கு (அசந்தா, எல்லோரா, ஆமதாபாத்து, சபர்மதிநிலையம், உதயபூர், சோத்பூர், செய்சல்மர் முதலியன).

முதல் உலா, சில கட்டுரைகள் ஆயின

இரண்டாம் உலா, பார்க்கும் இடமெல்லாம் பல்கலைக்கழகம் என நூலாயிற்று.

மூன்றாம் உலாவின் நூலாக்கம் இஃதாம்.

அழைப்பார் கொண்டுள்ள வாய்ப்புகள் என்ன செய்கின்றன? அழைக்கப்படுவார் வாய்ப்புகளாக விளங்குகின்றன.

அழைப்பார் வீட்டில் தங்கலாம்; விருந்துண்ணலாம்; அவர்கள் ஊர்தியில் அவ்வூரைச் சுற்றலாம்! அவர்கள் பணிக்கு நெருக்கடி இல்லாமல் உடனாகி இருக்கலாம்!

ஆனால், அழைக்கப்பட்டவர் மாநிலம் மாறி மாநிலம் சென்று பார்க்கும் திட்டத்தினராய் இருக்க அவர்களே ஏற்பாடு செய்வர் எனின், எத்தகைய திட்டத்தெளிவும், ஏந்துகளும், முன்னேற்பாடுகளும் வேண்டியிருக்கும். நான்காயிரம் ஆயிரம் (கி.மீ) இன்னுந்தில் மும்மாநிலங்கள் (மராத்தியம், குசராத்து, இராசத்தானம்) சென்று - தங்கி - கண்டு - வரவேண்டும் எனின் எப்பெரிய பாடு?

அப்பாடுகளையெல்லாம் ஒரு முறைக்கு மும்முறை ஏற்று முழுநிறைவாக ஒவ்வொன்றையும் முடித்துத் தர எத்தனை பேரால் இயலும்! அவ்வன்பின் உறவுக்கு அளவு கோல் ஏது? "அன்பெனும் பிடியுள் அகப்படும்மலை அன்பெனும் குடில் புகும் அரசு!" என்பது வள்ளலால் வாய்மொழி.