உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அல்லூர் திருவள்ளுவர் தவச் சாலையில் நிகழ்ந்தது. குறளாய முறையில், திருமணம் என்னால் நிகழ்த்தப்பட்டது. உரிமை உறவினர் வேலாயுதர்க்கு எவர்? கொள்கையர் எவரும் உறவர்; உறவினர் மட்டுமா மணவிழா அவையர்? முப்பால் கொள்கையர் எப்பால் இருப்பினும் அவரெல்லாம் ஒன்றுபட்டு வந்து நிற்க நிகழ்த்தப்பட்ட மணவிழா சேரலத்துத் தட்டாம்படிச் சிவானந்தர் மணவிழாவுக்கெனவே வந்திருந்தார். வாழ்த்தினார்! கல்வாக்கத்தார் புதுவையார் தமிழகத்தார் என அமைந்த கொள்கை உறவரும் குடும்ப உறவரும் கூடிநிற்க எளிமையாய் இயற்கையொடும் இயைந்து நடந்த திருமணவிழா அது.

அவை.

தவச்சாலை மணத்திற்கெனச் சில கொள்கைகள் உண்டு.

1. குலப்பிரிவு மறுப்புத் திருமணம்.

2. பெற்றோர் ஒத்துக் கொண்டு முன்னின்று நடத்தும் திருமணம்

3. பெண்கொடை மாப்பிள்ளைக் கொடை எனப் பேசாத் திருமணம்.

4. குறளாய முறையில் திருக்குறளை ஓதி நடத்தப் பெறும் திருமணம்.

இந்நான்கும் அமைந்து தவச் சாலையில் செய்யப்பட்ட முதன் முதலாம் திருமணம் இதுவேயாம்.

படைத்துறைப் பதவியராம் மணமக்கள் வெங்காலூர் புனே, கோல்கத்தா, சம்மு, நாசிக்கு எனப் பல்வேறு இடங்களில் பணி யாற்றிப் பதவியுயர்வும் பெற்று விளங்குகின்றனர். இரு குடும்ப ணைவாகவே இத்திருமணம் அமைந்து விட்ட பேற்றால் பெற்றோரும் உறவரும் முழுமையாகவும் அவ்வப்போதும் உடனாகி வாழ்கின்றனர்.

சரவணர் அருள் மொழியர் அன்பு வாழ்வில் முகிழ்த்த அருமைச் செல்வங்கள் இருவர். அவர்கள் இயற்கைவான் கொடைப் பேறாம் சாரல், அருவி என்னும் பெயரினர். இதுகால் பத்தும், மூன்றும் ஆம் அகவையர் (2009).

சரவணரும் அருள் மொழியரும், வேலாயுதர் கலைநிதியர், கொண்ட பழங்கெழுமை போற்றும் திறத்தராகத் திகழ்தலால்,