உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

173

சேகரம், ஒருமித்த வாழ்வியல் ஊடகப் பொதுமை என்பவற்றைத் திரட்டிக் கொள்வதைக் பொறுத்து அல்லவோ!

கண்டும் கேட்டும் எண்ணியும் மறந்தால் பயன் என்ன?

அவ்வவ்விடத்தே அவ்வப்போதே குறித்து வைக்காத காட்சியும் செய்தியும் கனவெனவும் கானல் நீரெனவும் கைநழுவிப் போகவே செய்யும். சுற்றுலா, பொழுதுச் செலவுமட்டுமா? பொருட்செலவு, வேலை விடுத்தல், செய்வனவற்றைத் தள்ளி வைத்தல் என்பன வெல்லாம் உடையது அல்லவோ!

சுற்றுலா வகைகள் தாம் ஒன்றா இரண்டா?

தனித்தனி நோக்குக்கு ஏற்ப முன்னேற்பாடு செய்ய வேண்டும் அல்லவோ! நோக்க மில்லாச் செலவு (செல்லுதல்), ஆக்கக் கேட்டின் அடிமணை!

வழிபாட்டு நோக்கமா, வரலாற்று நோக்கமா, இடங்காணல் நோக்கமா, வணிகம் - தொழில் நோக்கமா, வாழ்வியல் தெளிவு நோக்கமா, புதுமை காண் நோக்கமா, பொருள் தேடு நோக்கமா- இந்நோக்கங்களை முனவைத்து, அவற்றுக்கு வெற்றியாம் வகையில் செலவு மேற்கொள்ளல் சுற்றுலாப் பயனைப் பெருக்கும்!

-

என் சுற்றுலா நோக்கு, காணாதன காணல் நோக்கா? இவற்றைத் திரைப்படம் தொலைக் காட்சிகள் காட்டாக் காட்சி களாய் எவையும் எஞ்சுமா? கலைக்களஞ்சியங்கள், காட்சிப் படங்கள். சுற்றுலா மைய வெளியீடுகள் முற்படக் கண்டு அக் காட்சிகளைப் பதிவு செய்தோர் நூல்கள் நாட்டு வரலாறு, கலை வரலாறு என்பவை தேடுவார்க்குக் கிட்டாதனவா?

அடுக்கடுக்கான பருகு வகை -ஊண்வகை

J

சுவைவகை

காட்சி நிலையில் இருக்கக் காண்பதால் நிறைவு ஏற்பட்டு விடுமா?

கோடைக்கானல், உதகை, குற்றாலம் இன்னவை படிப்பால்

காட்சிப் படப் பார்வையால் - நிறைவாகி விடுமா?

'தேன்' என்று சொன்ன மட்டில் எழுதிப்படித்த மட்டில் சுவையேறி விடுமா?

மலரின் மலர்ச்சி - கொடியின் தழுவல் - அருவியின் தூவானம், அதன் முழக்கு புகுந்தாடும் இன்பம், படிப்பு இன்பத்தால் நிறைவாகிவிடுமா?

-