உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

கண்டு பிடிப்பு (Discovery) என ஒரு காட்சிப் பகுதியே தொலைக் காட்சியில் காணவாய்க்கின்றது: அவர்கள் செயல் படப்பிடிப்பு நாம் எளிதில் காண இயலா அரியவையே! ஆயினும், அவ்வளவில் இல்லை எனினும் நாமே நேரில்கண்டு திளைக்கும் தன்னை மறந்த இன்பப் பேறு வாய்க்குமா?

என்நோக்கு முதலும் முதலின் முதலும், முடிபும் முடிபின் முடிபும் எல்லாம் வாழ்வியல் நோக்கே! இலக்கியமா, இலக்கணமா, வரலாறா, கதையா, காட்சியா, பொழிவா எழுத்தா எல்லாம் எல்லாம் வாழ்வியல் நோக்கே! அந்நோக் கொன்று கொண்டே என் சுற்றுலாச் செலவு மேற்கொள்ளப் பட்டதாம்.

என்னால் தூக்கும் அளவு எவ்வளவு, அவ்வளவு அல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்ற போதும் பொருள்களைக் கொண்டு பேயதில்லை. வழக்கமாக மதுரை, சென்னை, நெய்வேலி, புதுவை, சேலம், கோவை, தஞ்சை என ஊர்களுக்குக் கொண்டு போகும் சுமையொடு, உடைமட்டும் இரண்டு மூன்று சுவடிகள் கூடிய அளவு அல்லாமல் கொண்டு போவதில்லை. அவ்வழக்கப்படியே தோள்பை ஒன்று; தூக்குப் பை ஒன்று இரண்டொடு அணிய மானேன்.மற்றொன்று: போய்ச் சேர்ந்தால் அவ்விடம் நம்வீடாம் அருள்மொழி சரவணர் வீடு அல்லவா! மாற்றுடை என்ன மறு நாளே அணியமாக இருக்குமே!

22.02.2009 ஞாயிறு யானும், புதுவை அன்பர் வேலாயுதரும் தவச்சாலையில் இருந்து புறப்படுவதாகத் திட்டப் படுத்தியிருந்தோம். வேலாயுதரே, போக்கு வரவு பார்க்குமிடம் நாள் என்பவற்றையெல்லாம் துணைவியாருடனும் மகள் மருகர் ஆகியோரிடமும் கலந்து பேசித் தொடர்வண்டிச் சீட்டும் வாங்கி யிருந்தார். கல்யாண் சந்திப்பு நிலையத்தில் இருந்து நாசிக்குச் சந்திப்பு நிலையம் அளவுமட்டுமே முற்பதிவு வாய்க்கவில்லை. போய்ப்பார்த்துக் கொள்ளலாம் என்னும் திட்டம் கொண் டிருந்தார். அன்று விடியலில் புதுவையில் இருந்து வேலாயுதர் புறப்பட்டுத் தவச் சாலைக்கு நண்பகல் எய்தினார்.

திருச்சிராப்பள்ளியில் அன்பர் புலவர் செல்வராசனார் குடும்பத் திருமணம் ஒன்று அன்று காலை நடத்துவிக்க யான் இசைந்திருந்தேன். அருமையாக மங்கலவிழா நிகழ்ந்தது. அதனை நிறைவித்துத் தவச் சாலைக்கு எய்தினேன். வேலாயுதனார் முன்னரே