உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

-

அல்லரோ! சுடு பாறைக்கல் மேல் நிற்க எப்படி இருக்கும்; அங்கே ஆடுமேய்ப்பு! பாறைக்கல் மேல் பரண்! எங்கும் அனல் காட்சி என்றால் அங்கே தொடங்கிய எரிவூட்டு படலம் எங்குமா தொடர வேண்டும்? தொடர் வண்டியின் பக்கங்களில் மட்டுமல்ல. எட்டும் தொலைவுக்குக் கோடை வெப்பொடு கொடுவெப்பும் கூட்டினால் போல் எரிப்பு புகை மண்டல் கரிக்காடு மழைவருமுன் எரித்து விட்டால் மழையில் புல் தழைக்குமாம்! ஆடுமாடு இனிதே தின்ன வாய்க்குமாம்! நாடெல்லாமா இந்த எண்ணம்? புவிவெப்புக் கூடுகிறது என்று வெப்பைக் கூட்டிக் கொண்டிருப்பவரே ஓலமிடுகின்றனர்! 'புவியாவது வெப்பமாவது, நம்பாடு நமக்கு" எனத் துணிந்த கட்டைகளாக மக்களாகிவிட்ட போது, மரம் கரிக் கட்டையாகாமல் இருக்க முடியுமா?

காலமல்லாக் காலத்துப் புறப்பட்டு விட்டோமோ என எண்ணினால், இக்காலம் போகவில்லையானால் குளிர்வாட்டலில் என்ன ஆகும்? 'வெப்புக் கொடியது' என்றால், பனிக்கொடுமை கொடியதில் கொடியது ஆயிற்றே!

'பனிக்காலம் நன்று' என்றார் ஒரு பெரும் புலவர்!

'பனிக்காலம் நல்லதா? கொடும் நடுக்கலில்லையா?'

"ஆம், நானும் அதனைத் தான் சொல்கிறேன்" பனிக்கு ஆலம் நன்று: ஆலம் நஞ்சு இல்லையா? நஞ்சினும் கொடிது பனிக்காலம் என்று விளக்கினார்.

அற்சிர பாக்கம் என்னும் ஊர், மருவத்தூர் பக்கம் உள்ளதே. சூழல் எல்லாம் மலையாதலால் பனிமிகுதி கருதி அற்சிர (பனி) பாக்கம் என்றனர். இரவுப் பொழுதில் கொட்டும் பனி, மீன் குத்திப் பறவை குத்துவது போல் குருத்தெலும்பைக் குத்த வல்லதாம். 'அல் சிரல் பாக்கம்' (அற்சிரபாக்கம்) என்பது என்ன ஆயிற்று?அச்சிறு பாக்கம் ஆயிற்று! சிரல் - சிச்சிலி, மீன்கொத்தி. அச்சு இறுதல்: அச்சு ஒடிதல்.

முப்புரங்களை அழிக்க முக்கணான் கிளர்ந்த போது தேரின் அச்சு முரிந்ததாம்! அதனை மூத்தபிள்ளையார் கையால் முட்டுக் கொடுத்துத் தாங்கினாராம்! நமக்குத் தான் கதைவிடல் கேட்க வேண்டுமா? ஊரூர்க்குப் புனைந்துள்ள கதைகள் திரட்டப்பட்டால் எத்தனை எத்தனை வண்டிகளோ!