உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

-

-

இருபத்து நான்கு மணிநேரமும் பகலும் இரவும் பார்த்துக் கொண்டே இருந்தால் கண், புண்ணாகாமல் என்ன செய்யும்! மண்ணையும் மரத்தையும் மலையையும் மாநகரையும் மூடிவிடுவேன்: நீங்கள் கண்ணை மூடுங்கள்: உங்கள் நலத்துக்கே ஒளிப்பகலும் இருள் இரவும்! எனக்கு எவரும் கட்டளை இடும் அளவுக்கு - கண்டித்துக் கூறும் அளவுக்கு தண்டிக்கும் அளவுக்கு நடந்து கொள்ளவே மாட்டேன்! எந்த அளவு ஏற்றதோ அந்த அளவு கோல், என் இயற்கை அளவு கோல் என்றாலும், அறிவுடையேம் என்னும் மக்கள் கடைப்பிடிப்பார்களா? மாட்டார்கள் என். தானே இயற்கை தன் ஒளி இயக்கத்தால் மட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி- இரவு - பகல் எனக் காலம் காட்டிக் காலமெல்லாம் உயிர்களைக் காத்துவருகிறது. இந்த அருமையை என்ன சொல்வது? எப்படி வியப்பது?

று

23.02.2009 பகல், இரவு கழிய, 24.02.09 விடிகாலைக்கதிர் வருமுன்னே வழக்கம் போல் விழித்துக் கொள்கிறோம்!

எனக்குப் பகலில் அங்கும் இங்கும் பார்ப்பது குறிப்பு எழுதுவது வேலை!

வேலாயுதனார், என்னைக் குழந்தை, தாய், தந்தை, வழிகாட்டி என எல்ா நிலைகளுமாக ஏற்றுக் கொண்ட ஏந்தல்! என்னை அவர்பேணத்தவறார் நான் அவரைப் பேணத் தூண்டுவேன்: தூண்டினாலும், அவர்போல் மாறும் பேறு எனக்கு வாய்க்க விடார்! உதவி புரிதலில் பங்குதராக்கருமி அவர்! என்ன செய்வேன்? ஆதலால், எழுதுகிறேன் எதுவும் செய்யாமல்!

சுற்றில் நான்பேச்சைக் குறைத்தல், பழகிப் போன நடைமுறை! அவர், வாய்த்தால்-அவர் பக்கம் இருப்பவர் தமிழர் என்று கண்டு கொண்டால், கண்டு கொண்டஅளவில் தொண்டைத் தொடர்வார்.

எங்கிருந்து எங்கே, ஊர்பேர், தொழில் குடும்பம் எனப் படிப்படியே கேட்பார்! அவர் தம்மைக் கேட்டாலும் கேளா விட்டாலும் தம்மைப் பற்றிய எளிய அறிமுகம் செய்வார்! அதிலும், என்னை முன்வைத்துப் பேச்சைத் தொடங்குவார். ஆர்வமுடையவர் காது கொடுத்துக் கேட்பார் என்றால், தக்க பல செய்திகளை தமிழ் தமிழர் தமிழினச் செய்திகளை எடுத்து ரைப்பார். இயற்கையைக் காத்தல் -பொது நலம் போற்றல் - திருக்குறளை வாழ்வியலாக்கல் தமிழர் ஒன்றுபடுதல் என

-

-

-

-