உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

-

179

விரிவார்! நான்முழுதுறக்கேட்பேன்; அவர் என்னை இழுக்காமலே பேசுவார்! கேட்பவரிடம் மொழி -இன பண்பாடு - உலகநலம் பற்றிய உயரிய விதைகளை விதைப்பார் வேலாயுதர்!

எங்கும் எப்பொழுதும் அவர் செய்யும் இப்பணி,சுற்றுலாவிலும் தொடர்தல் யான் முன்னைச் சுற்றுலாக்களின் போதும் அறிந்ததே! எதிர்பாரா நல்ல விளைவுகளை அது ஏற்படுத்துதலும் உண்டு! கேட்டவர் கேள்வியராக மட்டுமிருந்து பொழுது போக்காகப் பேசினாலும் தம் கடமையைத் தக்கவாறு செய்ததாக வேலாயுதர் மகிழ்வாரே அன்றி, அது வெற்றுரை எனக் கொள்ளார்! இவரே போன்ற இன்னொரு தொண்டர் நெய்வேலி அனல்மின் பொறிஞராக இருந்து ஓய்வு பெற்றுச் சேலத்தில் வாழ்ந்து வரும் அறவாழியார்! இருவரும்கூடி விட்டால் நல்ல செய்திகள்! நயமான வழிகாட்டுதல்! கேட்பவர்க்குக் கிட்டும்! கிட்டவில்லையா? இருவருமே கவலைப்படார்! "எம் கடன் பணி செய்து கிடப்பதே' என்பது பழகிப் போன திருத்தொண்டர் கூட்டத்தார்.

வேலாயுதரோடு மூன்று நான்கு மணிப் பொழுது உரையாட வாய்த்தவர், தமிழரெனினும், வழி தவறி வழிபாட்டு நெறிதவறி, வழிபாட்டில் மயக்குவார் மயக்கில் மயங்கி அவர் அடித் தொண்டராகி, அவர் பெயரால் நிறுவனம் நடத்தி வருபவர்! புட்டபர்த்தி போகின்றவர் அவர்! வள்ளுவரும் வள்ளலாரும் தேவார மூவரும் வாசகரும் ஆழ்வாராதிகளும் காட்டாத வழிகளா, தமிழர்க்கு?

'சில நூல்களைத் தந்தார்குறிப்புகள் தந்தார்’ சிந்திக்கத் தூண்டினார்! ஆரிய மாயை ஒன்று; திராவிடமாயை மற்றொன்று: ரண்டன் மாயையும் நீங்கிய தமிழரை தமிழ் உலகரைக் காணவேண்டுமானால் அறவாழியார், வேலாயுதனார் போலும் உரையாடி அளவளாவி உணர்த்தும் தொண்டர்கள் ஊர் ஊர்க்கு வேண்டும்!

கரட்டு நிலத்தில் கார் நெல் விதைத்து விளைவுகாண இயலுமா? கழனியாக்குதல், முதல் கடமை அல்லவா!

விடியல் ஒளி வெளிப்பட்டது: செங்கதிர் கிளர்ந்தது, அது, பட்ட இடமெல்லாம் 'பட்டொளி' யாயிற்று.