உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

படுக்கும் போதுக்கு முன்னரே தொடங்கிய ஆந்திர மாநிலத்தின் எல்லை இன்னும் முடியவில்லை! தொடர்ந்து செல்கிறது! விரிந்த நெடிய பரப்புப் புலப்பட்டது.

வண்டியேறி இருபத்திரண்டு மணிப் பொழுது கடந்து விட்டது. என்கால்கள் வண்டியை விட்டு இறங்கவில்லை. ளங்கோவடிகள் மொழியின்படி என் அடியை மண்மகள் அறிந்திலள்! இன்னும் கீழே இறங்க வேண்டிய 'கலியாண் சந்திப்பை அடையப் பத்து மணிப் பொழுதுகள் உள்ளன. ஓரிரு முறை எழுந்து நடக்க இயற்கை ஏவியதை நிறைவேற்றினேன்!

இச்செலவுத் தொலைவும் மணிப் பொழுதும் பெரிதாகத் தோன்றவில்லை, நியூயார்க்குச் செலவுக்குத் தொடர்ந்து பத்தொன்பது மணிநேரம் வானூர்தி மூன்றிருக்கையின் இடை யிருக்கையில் இருந்ததை நினையும் போது ஒரு பொருட்டாகத் தோன்றிற்றில்லை. முன்னே சம்முவுக்குச் சென்ற தொடரிச் செலவு அறுபது மணியின் மேலும் சென்றதை எண்ணின் ஒன்றும் பெரிதில்லை. ஆனால், ஒன்று இயல்பாகப் பெரிதாகின்றதே!

அகவை நம் கட்டுக்குள்ளாகவா உள்ளது? உள்ளத்தில் என்ன இளமை உணர்வு கொண்டாலும் உடல் முதுமை தலைகாட்டத் தவறாதே!

}

மற்றம் முன்னே மும்முறை இடுப்பு எலும்பில் ஏற்பட்ட அடி, 'வளையில் இருந்து, நண்டின் பிள்ளை வெளியே தலை காட்டுவது போல, இடை டை இடை தலை காட்டவே செய்தது! வலிக்கிறது என ஏறிப்படுத்தால், பக்கம் பார்க்க இயலாதே! வலி வருவது வலிமையே எனத் தாங்கித் தடவிக் கொள்ள வேண்டியது தான்!

உரிய பொழுதில் ஓடும் வண்டியிலேயே பருகவும் உண்ணவும் வாய்ப்பு இருப்பதால் மட்டுமன்று இடை இடை நிலையங்களில் இறங்கிப் பழவகை வாங்கி வழங்கும் வேலாயுதர் உள்ளாரே! பிறகு

என்ன?

பார்க்க இருபாலும் புதுப்புது மண்; புதுப்புதுப்பயிர்; குடியிருப்பு; தொலைவிடத் தோற்றம்: மக்கள் வேலை; போக்கு வரவு; விற்பவர் வாங்குபவர் -பொழுது போய்விடாதா! உரிய பொழுதில் கல்யாண் நிலையம் எய்தியது. ஆங்கிருந்து. நாசிக்கிற்கு வண்டிமாறவேண்டும்! பதிவோ இல்லை! ஆனால் நடைசீட்டு