உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

181

இருந்தது. துணிவே துணை என்று நடை மாடியில் ஏறி இறங்கி உரிய தடத்தில் புறப்பட இருந்த தில்லி வண்டியில் ஏறிவிட்டோம்!

வேலாயுதர்க்கு இருந்த நம்பிக்கையும் துணிவும் எனக்கில்லை. எனக்கிருந்தது வண்டியில் பதிவுப் பெட்டியுள் பதிவின்றி ஏறி விட்டோம்! பதிவுக் கட்டணம் கேட்கலாம்! அல்லது பதிவிலார் செல்லும் பெட்டிக்குச் செல்லச் சொல்லலாம்! எப்படியும் நின்று கொண்டேனும் இரண்டு மணிப்பொழுதைக் கடத்திவிட்டால் நாசிக்குச் சேர்ந்து விடலாம் என்பது.

ஏறிய பெட்டியில் பதிவினர் எண்மரும் இருந்தனர். ஆனால் பகல் பொழுது! எவரும் படுக்கவில்லை என்றால் இருக்க இடம் இராது. இருவர் படுக்கையராய் உச்சியில் இருந்தனர். “நீங்கள் உயரே இருப்பது கீழே இருக்கும் எங்களுக்கு மிக மிக நலமானது! மேலானது! மேலேயே உறங்கினாலும் உறங்கா விட்டாலும் மேலிருந்து இறங்காதீர்கள்' என்று மனத்தால் தாலாட்டிக் கொண்டிருந்தேன்!

வந்துவிட்டார், வருவாரா, வருவாரா (ஏதாவது சிக்கல் இருந்தால் இப்படித் தானே) என்று எதிர் பார்த்த சீட்டு ஆய்வர்! வேலாயுதர் சீட்டை நீட்டினார்! அவர் தாளில் பதிவு இராதே! கோவை தொட்டு வருபவர்கள், இரண்டு மணிப் பொழுதில் நாசிக்கில் இறங்கிவிடுபவர்கள்; படுக்கை போடமாட்டார்கள்! படுக்கைப் பதிவர்க்கு இ டைஞ்சலாக இரார் என எங்கள் உள்ளமே அவருள்ளமாகி விட்டது போல, சீட்டிலே ஒரு பொற்கோடு போட்டுவிட்டு ஒன்றும் சொல்லாது போய்விட்டார்! இனி என்ன?தொடரவண்டி அமைச்சர் 'யாத'வுக்கு ஒரு கும்பிடு! சீட்டு ஆய்வர்க்கு ஒரு கும்பிடு! நின்மதியாயிற்று, நெட்டுயிர்ப்பு நீங்கி! இறங்கு என்றால் நம்ஊரா, நம் நண்பரா? நம் ஊர் என்றால் எப்படி யாயிருக்கும் என்பதை என்னால் தெளிவாகச் சொல்ல முடிய வில்லை! காசுக்கு முன்னால் அண்ணன் என்ன? தம்பி என்ன?

சரியாக யாங்கள் இருந்த பெட்டியருகே படைத்துறைச் சீருடையொடு அருள்மொழியார் நின்றார்! ஆம்! தவச்சாலை நாசிக்குக்கு வந்து விட்டதா? அல்லது புதுவை வேலாயுதனார் இல்லத்திற்கே வந்து விட்டோமா!

அழைத்தவர் எவரோ, அவர் அழைக்க வண்டியோடு வந்துள்ளார்! மடையெடுக்கும் வெள்ள அன்பில், படை உடை