உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

என்ன தடையா? அச்சமா? அயர்வெல்லாம் அமைதிப் புறாப் பறப்பது போலவும் விண்ணேறிப்பாய்வது போலவும் உள்ளம் கிளர்ந்தது!

வண்டியேறிச் சீட்டு ஆய்வாளர் பார்த்துத் தலையசைத்த வரையிலும் இருந்த பதைப்பு என்ன? இப்பொழுது தாவி எழும்பும் மகிழ்வு என்ன?

அருமைப்பேர்த்தி அருள், சுமை ஆளைத் தேடாமல் தாமே சுமை ஆளாக மாறினார். அப்பா சுமக்க முடியா மூட்டையையும் என்சுமை ஒன்றையும் இயல்பாக எடுத்துக் கொண்டு மேல் பாலப் படிக் கட்டில் நடையிட்டார்! அவர்க்கோர் இன்பம். சுமை ஆளில்லாமலா சுமையை எடுத்தார்! பகுத்துச்சுமப்பது பகுத்து உண்பது போலும் இன்பம் அல்லவா!

நிலையத்தில் இருந்து செல்லும் வழியில் அருள், சரவணர் அலுவலகங்கள் இருந்தாலும், பணிமுடிந்துவிட்ட படியால் ஒரு முக்கால் மணிப் பொழுதில் குடியிருப்பை அடைந்தோம்! பின்னென்ன எங்கள் உள்ளம், குற்றாலத்துப் பொங்குமா கடலாயிற்று! சரவணர் அன்னையார் சரோசினியார்,

அருளார் அன்னையார் கலை நிதியார், அருளின்தங்கை அன்பு; அருளின் மக்கள் சாரல்,

அருவி எனக் கண்டால், பொங்குமா கடல் என்பது பொருத்தத்தில் பொருத்த மல்லவா! சாரலும் அருவியும் குற்றாலப் பொங்குமா கடல் சார்ந்தவை தாமே!

அருள்மொழி சரவணர் மனை, விரிவானதே. புறச்சூழல் தோட்டம் சாலை முன்னரே குழந்தையர் விளையாட்டிடம் என அமைவு பெற்றதே. எனினும் நானும் வேலாயுதரும் தங்குதற்குத் தம் மனையை அடுத்தே அமைந்த விருந்தினர் இல்லத்தை ஏற்பாடு செய்திருந்தனர். வெளிநாட்டார் குறிப்பாக உருசிய நாட்டுப் பொறிஞர்கள் தங்குதற்கென அமைக்கப்பட்ட வான் படைத்துறை மாளிகை! இனி அதனைப் பற்றிச் சொல்ல வேண்டியதென்ன?

24.02.2009 இரவு அயர்வு தீர வெந்நீராடி வெய்துண்டு விருந்தினர் மாளிகையில் ஏந்தாகத் தங்கினோம்! வேலாயுதரும்