உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

183

என்னொடு சேர்ந்ததால் விருந்தாளர் ஆனார்! வீட்டாளர் அல்லவா? நானும் வீட்டாளன் தானே! ஆம் என்பதை இருபாலும் ஒப்புக் கொள்வோம் என்றாலும் எனக்கு என் விருப்பம் போல் படிக்க எழுத ஓய்ந்திருக்க - தனி அமைவு வேண்டும் என்ப நெடியகாலமாக உணர்ந்து போற்றி வருபவர்கள் ஆதலால், அம்முறையே செம்முறை எனக் கொண்டனர்!

-

-

உணவுக்குரிய வேண்டத் தக்க -தொன்று உணர்வு அல்லவோ! அது கருதி உணவை அவர்களே வழங்கினர், அடுத்த மனைதானே விருந்தினர் மாளிகை!

-

தொடர்வண்டியில் வந்ததால் ஊர்களை பக்கங்களை நகரங்களை வாய்த்த அளவில் அறியலாம்! இறங்கிப் போய்ப் பார்க்கத் தானே முடியாது!

-

அவ்வவ்வூரைப் பற்றிய எண்ணங்கள் அவற்றைப் பற்றிய வரலாறு, அவ்வூர்ப் பெயர் அறிந்த அளவில் தோன்றாமல் இருக்க முடியாதே!

விசயவாடா:

விசயை (வெற்றி) யம்மையின் திருக்கோயிலைக் கொண்ட அழகிய பெரிய நகரம் வாடா. கனகதுர்க்கா என வழங்கப் படும் அவ்வம்மையே காவல் தெய்வமாகவும் கொள்ளப்படுகிறார். பெசவாடா என்பதும் விசயவாடாவின் பெயர். ஆந்திரமாநிலம் கிருட்டிணை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. முப்பக்கமும் மலைகளால் சூழப்பட்ட இவ்வெழில் நகரின் தென்பால் கிருட்டிணை ஆறு செல்கின்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வணிகப் பெருநகரம் இஃதாம்.

ஐதராபாத்து:

இவ்வூரைக் கண்டதும் - பெயர்ப் பலகையில் தான் - இரண்டு பாரிய நினைவுகள் எழுந்தன.

ஒன்று தஞ்சை கரந்தைத் தமிழ்ச்சங்கம் நிறுவிய உமா

மகேசுவரனார் பொழிவு நினைவு.

மற்றொன்று செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார்

பணியாற்றிய நினைவு.