உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

185

தடுமாற்ற முறு மெனவும், அம்மொழியைக் கருவியாகக் கொண்டு கற்பிக்க முயலும் கலைக்கழகம் உருப்படாது மாய்ந்தொழியும் எனவும் கூறினர்.

மற்றும் சிலர் ஆங்கில நாட்டிலுள்ள கலைக்கழகங்களின் நன்மதிப்பைப் பெற மாட்டாதென நினைத்தனர். யானோ இக் கலைக் கழகத்தாரின் புதுக் கொள்கையில் முழுநம்பிக்கை வைத்தேன். கழகம் தொடங்கியவர்களின் மதிநுட்பத்தை மிகவும் மெச்சினேன். துணிவுடன் செயல்புரிந்ததை மகிழ்வுடன் பாராட்டினேன்.

தாய்மொழிப் பயிற்சியில் தமக்குள்ளகுறையினை உன்னிச் சொல்லாற்றல் இல்லையே எனக்கணக்காயர் முதலில் மயங்கினர். இப்போது கழகம் தொடங்கிப் பத்தாண்டுகள் ஆயின. இந்துத் தானி மொழி புதுத்தேவைகளுக்கு ஏற்றாவறு விளங்கு வதையும் கலைநூற் பொருள்களை எளிதே கூறுவதற்கு ஏற்ற கருவியாய் இருப்பதையும் உள்க் கருத்துகளை முட்டின்றி மொழிவதற்குத் தம் சொல்வளம் பெருகியதையும் அக்கணக் காயரே கண்டு இன் புறுகின்றனர்.

இலக்கியங்களும் கணிதமாகிய கலைகளும் இயல்பிலே வந்து தாய் மொழியில் இசைவுடன் அமைந்துவிட்டன. சுருங்கக் கூறின், கழகம் தோன்றிய காலத்தே பலர் உள்ளத்தும விளைந்த ஐயப்பாடுகள் யாவும் அகன்றொழிந்தன. புதுக் கலைகள் எல்லாம் மிக எளிதில் தாய் மொழியிலே கற்பிக்கப்படுகின்றன. இக்கழகத்தே தேர்ச்சி பெறுபவர் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள கலைக் கழகங்களின் தேர்வுகட்கு எவ்வாற்றானும் தாழவில்லை என மதிக்கப் பெறுகின்றனர். நீதிக்கலை, மருத்துவக்கலை, சிற்பக்கலை, உழவிக்கலை தொழிற்கலைக் கல்லூரிகளும் சீரிய முறையிலே வளர்க்கப் பெறுகின்றன" என்கிறார்.

இதனை எடுத்துக் கூறும் உமாமகேசுவரர், செயற்கரிய கருமமெனத் தமிழர் கருதும் செயல்களை உசுமானியக் கலைக்கழகத்தினர் பத்தாண்டுகளில் மிக எளிதில் இயற்றியதன் பொருட்டென்னை?

உண்மையான மொழிப்பற்றும் தன்னம்பிக்கையும் எண்ணிய கருத்தை எவ்வாற்றானும் இயற்றுவேம் என்னும் மனத் திண்மையும் அல்லவா!