உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

தமிழன்பர் என மகுடமிட்டுக் கொள்பவரிடத்து இத்தகைய காணப்படுகின்றனவா? இவர்

பெற்றிமைகள்

மாட்டுத் தன்னம்பிக்கை இல்லை. தாய்மொழியின் எழில் நலங்களையும் சொற்சுவை பொருட்சுவைகளையும் காண்பதற்குரிய தமிழறி வில்லை. ஆதலால் புதுக் கருத்துக்களைப் பேசுதற்குச் சொல்லில்லை எனவும் எழுதுதற்கு எழுத்தில்லை எனவும் பழிதூற்றி அயல் மொழிகட்கு அடிமைகளாய் இருக்கின்றனர் என்று வருந்திக் கூறினார் (செ.செ.12:1933-1934)

2009 ஆகிய இவ்வாண்டுவரை பயிற்றுமொழி தமிழே என அமையப் பெற்றதா? உள்ளதிலும் கேடாய்த் தர்ய வயிற்றில் கருக் கொண்ட போதே அயல் மொழிக்கு அடைமானம் வைக்கப்பட்ட பிறவி பிறக்கப் போகின்றது எனப் பட்டம் தாங்கிப் பெற்றோர் அயல் மொழிப் பள்ளியில் முற்பதிவு செய்து அங்கொரு மகப்பேறு இருப்பது போலக் காத்திருக்கும் இழிவரவு இத்தமிழகம் போல எங்கேனும் உண்டா?

தமிழால் ஆட்சி பிடித்து - தமிழுக்கே எங்கள் வளமும் வாழ்வும் ஊனும் உயிரும் என்று பறையறைந்தவர்- அறைகின்றவர் ஆட்சிநிலை இஃது என்றால், தமிழ்ப் பிறவிபிறந்தும் அயற் பிறவியாக அழகுமுகம்

காட்டுவதே வாழ்வாகிப் போனவர்களும், தமிழை எந்நிலையிலும் ஒழித்துக் கட்டலே எம் பிறப்புரிமை எனக்கொண்டு நன்றியும் நாணும் அற்றுத்திரியும் அயன்மையரும் தாமா உமாமகேசுவரர் கூறிய கடமைவீறுடையவராக இருப்பர்?

அதே ஐதராபாது உசுமானியாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திணைக்களம் ஒன்று உண்டு. அக்களத்திற்கு வேண்டா வகையில் இடர்மிக்க உடலும் நோயும் நலிக்கும் நிலையில் செந்தமிழ் அரிமா சி. இலக்குவனார் அமர்த்தப்பட்டார்.

'தமிழே பயிற்றுமொழி' என்று நடைத்திட்டம் தொடங்கி - நடக்கத் தொடங்கு முன்னரே சென்னை மாகாணமாகவே இருக்க வேண்டும் என்று பிடியாய் பிடி பிடித்திருந்த அரசு வேலையைப் பறித்து வேலூர்ச் சிறைக்குள் அடைத்து அவலம் புரிந்தது. அவ்வரசைத் தமிழெழுச்சியே மூட்டையைக்கட்டி வீட்டுக்கு

-