உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

187

விடுத்த பின்பு ஆட்சிக் கட்டில் ஏறிய அறிஞர் அண்ணா, வேலை இழந்த பேராசியர்க்கு அவர் மகனார்க்கு வழங்கும் திருமணப் பரிசாக வேலைவழங்கினார்!

தமிழகத் தலை நகரில் சிறந்தோங்கு மாநிலக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவராக அமர்த்தப் பெற்றார். ஆனால் அந்நாள் கல்வி அமைச்சர் ஆங்கிலக் காவலராக இருப்பதை இலக்குவர் சுட்டிக் காட்டியது பொறுக்காமல், ஓராண்டொடு வேலையை முடித்து ஐதராபாத்து உசுமானியாவிற்குப் போகச் செய்தார்! அயன் மொழியூடு ஆளும் துணையற்ற பதவிக்கு விடுத்த பெருந்தகைகளின் செயல்கள் உள்ளனவே! இவை எவ்வளவு மொழிப் பற்றாளர்க்குக் குளுமை செய்வன! ஆனால், மந்தையாட்டு நிலைத் தமிழர் மனத்தில் உறைத்ததா?

இப்பொழுது இவண் சுட்டப்பட்ட நால்வரும் இல்லை. ஆனால், நம்முள் அவ்வெண்ணம் புகுந்து வெதுப்புவதுவிட்ட பாடில்லை!

என்னே, தமிழ்த் தாயின் போலிமை மக்கள் நிலை!

ஒவ்வொரு பெருநகரையும் சந்திப்பையும் கடக்கும்போது நம்முள் எழும் அதன் வரலாறு ஓடத்தான் செய்கின்றது! ஆனால் நேர்காணலுக்கு வாய்த்தனவற்றை எழுதுவதே சாலும் என அமையலாம்!

சுற்றுலாவைத் திட்டமிடும் போது, நாசிக்குப் போய்ச் சேர்ந்த பின்னர் ஒரு நாள் ஓய்வு கொண்டு சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது ஆகும். ஆனால் நாள் நீட்டிப்புக்கு இயலாது என்னும் நிலையில் மறுநாள் (25.02.2009) விடியல் பொழுதே மகிழ்வுந்தில் புறப்பட்டோம்! விடியல் 5-00 மணிக்குள்.

வேலாயுதனார், கலைநிதியார், சரோசினியார், யான் நாங்கள் நால்வரும் சென்ற செலவு முதற்கண் அசந்தா குடைவரைகள்!

அவுரங்கா பாத்து என்னும் பெருநகருக்கு 104 அயிரம் (கி.மீ.) தொலைவில் உள்ள இடம் அசந்தா! நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து இருநூறு ஆயிரத்திற்குமேல் வரவேண்டும். நாங்கள் அசந்தாவை அடுத்த போது பகல் பத்துமணியைத் தாண்டி விட்டது. ஆங்கிருந்து அவுரங்கா பாத்துக்கு நூறு அயிரம் சென்று மேலே எல்லோராவை எட்ட வேண்டும்.

-