உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

அசந்தா குடைவரை ஏறப் படிக்கட்டுகள் உள்ளன. தட்டையான பாறை ஏறி மேலே படிக்கட்டுகளில் செல்லுதல் அந்த வெயிலில் அயர்வாகவே இருந்தது.

நாம் சென்ற மகிழ்வுந்து நான்கு கல்களுக்கு அப்பாலேயே காடு கரடுமலை எனத் தொடங்குமிடத்திற்கு முன்னரே நிறுத்தப் பட்டு விடுகிறது. அரசுப் பேருந்து வழிதான் செல்ல வேண்டும். நடப்பாரும் நடக்கலாம். குளிரூட்டப்பட்ட பேருந்தில் இருந்து இறங்கி ஏற வெயிலில் படிக்கட்டில் ஏறுதல் கடினமே எனினும் உள்ளுற ஓங்கிய ஆர்வக் குளிரும் காட்சிக் கவினுமாய் ஈர்க்க ஏறினோம். முதற் குகையுள் புகுந்தோம்!

வெப்பம் அகன்றது; அயர்வு அகன்றது; ஆர்வம் பொங்கித் ததும்பியது. பருகுவன் அன்ன ஆர்வத்தராய்ச் சிலைமுன் சிலையானோம்! நிலையாய் நாமும் நின்று விட நேரம்-காலம் என்பனவெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனவே! விரைந்து ஓட்டுகின்றனவே!

கு

உலகவாழ்வைப் புத்தர் துறப்பதற்குக் காரணமாகச் சொல்லப்படும் காட்சிகள் முதல் குகையிலேயே இடம் பெற்று விடுகின்றன. ஒரே ஒருதலை மாமனுக்கு: நான்கு உடல்கள்! இடம்மாறிப்பார்க்கப் பார்க்க மான்தலை ஒவ்வோர் உடலுக்குத் தக அமைக்கப்பட்டுள்ள காட்சி சிற்பியின் கற்பனை, கலைத்திறம் செய்நேர்த்தி என்பவற்றை எல்லாம் ஒரு சேரப் புலப்படுத்துகின்றன.

இங்குள்ள அவலோகிதர் (புத்தர்) சிலை, உள்ள சிலைகளில் எல்லாம் கொள்ளை கொள்ளும் வனப்பினது. இச்சிலையைக் கண்டே அசந்தா சிலைகளுக்கு உலகப்புகழ் வாய்த்திருக்கும் என்று பாராட்டுரைக்கும் வனப்பினது. மற்றைக் காட்சிகள் இல்லாமல் இல்லை. செம்பியன் என்பான் சோழன்! செம்பியன் 'சிபி' என வடவரால் வழங்கப்பட்டான்! அவன் புறாவைக் காப்பதற்குத் தன்னுடலை அரிந்து வைத்த அரிய வள்ளல் என்னும் பெருமையன் அல்லனோ! அவனும் அவன் மடியில் புறாவும், அருகே துலைக் கோலும் இடம் பெற்றுள்ளன.

வனப்புறு கலைகள் வாய்ந்த ஆறுதூண்கள், பாரிய அரங்கம் என்பவற்றையும் உள்ளடக்கியது இக்குடைவரை. அழுந்திய வண்ணங்கள், அடுத்தே வெளிர் வண்ணங்கள்- பார்ப்பவர் பார்வையில் உருவும் நிழலுமாம் காட்சியை வரச் செய்கின்றன.