உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

189

சிற்பியரைப் போலவே வண்ண ஓவியரும்நம் எண்ணத்துள் புகுந்து கொள்கின்றனர்.

சிற்பம் ஓவியம் எனக் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகப் படைக்க வல்ல கலைவல்லாரைப் பண்டையோர் கண்ணுள் வினைஞர் என்றனர். காண்பவர் கண்ணிடத்தே தம் கலைத்திறனைப் பதியச் செய்து விடுவோர்க்கு இப்பெயர் தகும்தானே!

அசந்தா குடைவரை சிற்பம், ஓவியம், இரண்டன் பிரிவிலாக் கலைமாண் நிலையம் எனப் பதிவாகின்றது!

பிறை நிலா ஒன்றை நினைவு கூருங்கள்! படியேறும் இடத்தில் ருந்து தொடங்கி நீண்டு விரிந்து வளைந்து வலக்கைப் பக்கம் மேல் பக்கம் இடக்கைப் பக்கம் என விரிந்து செல்லும் குடை வரைகள் எண்ணிக்கை முப்பத்திரண்டு!

கீழ்தளம் ஓங்கி நிற்கும் பகுதியில் மட்டும் ஒரு குடைவரை: கீழ்தளம் தாழ அமைத்திருந்தால் மேலே ஒரு குடைவரை முக்கால் வட்ட வடிவம் கிட்டுமாறு அமைந்த மலை அமைப்பை அவ்வாறே குடைவரை ஆக்கிய அருமை ‘பறவைப் பார்வை'யாகப் பார்க்கும் போது, இன்பப்பூவை எடுத்துச் சொரிகின்றது, சுட்டெரிக்கும் பட்டப் பகலிலும் என்றால், முழுநிலவில் அருவிஒழுக்கும் ஆற்றுச் சலசலப்பும் கூடிய மழைக்காலப் பொழுதில் காண எத்தகு இன்பச் சுரப்பாம்! அருவியும் ஆறும் வறண்டல்லவோ கிடந்தன.

வீறுமிக்க வீரன் ஒருவன்! அவன் காலடியில் வீழ்ந்து கிடந்து அருள் செய்ய வேண்டும் ஒரு நங்கை; அவள் உணர்வு வெளிப்பாடு: மாசுற்ற நிலையிலும் என்னைப்பார் என ஈர்க்கிறது ஓர் ஓவியம்; இரண்டாம் குகையில் உள்ளது இது.

நான்காம் குகை மிகப்பெரியது; 28 தூண்களைக் கொண்டது: அடியார் கூட்டம் வழிபாடு செய்யும் காட்சி; ஓர் அணிலொடு பெருமான் உள்ளம் ஒன்றி நிற்கும் அருமை! அணிற்பிள்ளை என்று நாம் கொஞ்சுவோம் அல்லவா!

மேய்ப்பன் ஒருவன், ஓடும் ஆடுகளின் பின்னே அவன் ஓடுகிறான்: ஆடுசுமந்து இளைத்ததால் அல்லவோ அவர் அந்தணராம் அறவோராக செந்தண்மையராகச் சிறந்தார்! வழிகாட்டிகளாக விளங்கியவர்களைப் பொதுவில் 'மேய்ப்பர்' என்பது உலகளாவிய பார்வை! நம் திருமூலரை ஆனாயரைத் தாம் நினைவோமே!