உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

இளங்குமரனார் தமிழ்வளம் -30

பதினாறாம் குகையே படிக்கட்டுகளெல்லாம் கட்டுமுன்னர் அருவி ஆறு வழியே வந்து குகைகளுக்கு ஏறும் படிக்கட்டு களுடன் விளங்கியிருக்கும் போலும்! நுழைவாயிலின் இரண்டு பக்கங்களிலும் யானைச்சிற்பங்கள்! ஆற்றுக்கு இறங்கும் படிகள்! இப்படிகளின் பழமையைக் காட்டுவது போல் சில எஞ்சியுள்ளன. இக்குகையில் எண்கோணத் தூண்களும் சதுரப்பலகணிகளும்

உள்.

ஏர்ஓட்டும் போட்டியைப் புத்தர் பெருமான் நேர் பெறக் காணலும் உழவரும் ஏர்க்காளைகளும் படும் துயரம் துடிப்பு களைக் கண்டு அவர் துடிப்பதாகவும் காட்டப்படுவது எவரையும் ஈர்க்கும் காட்சிகள். மேலும், 'இறக்கும் இளவரசி'யின் ஓவியம் ஒன்று! அவ்விளவரசியின் கண்கள் சொருகும் நிலை துவளும் விரல்கள் ஆயவை அவலநிலையை அப்படியே கண்முன் நிறுத்துவன.

இதனினும் மேம்பட்ட ஓவியங்கள் இருக்கலாம். ஆனால் உணர்வை இப்படி மெய்யுற உணர்த்தும் ஓவியம் இருக்கவே முடியாது என்று 'ஐகிரிபந்து' என்பார் மதிப்பிட்டுள்ளார்! துய்ப்பாளியாம் அளவு கோல் தானே, துய்ப்புப் பொருளின் தானே,துய்ப்புப் அளவுகோல்!

பதினாறாம் குகையை ஒப்பதே பதினேழாம் குகையும். ஆனால், அக்குகையில் உள் சிதைபாடு இக்குகையில் இல்லை என்பது மகிழ்வுக் குரியதாம்.

தாக்கவரும் யானை; அதனைக் கையமர்த்தும் புத்தர்; அடங்கி ஒடுங்கிப் பணியும் யானை!

அகப்பாடலில் ஒன்று; தினைக் கொல்லையை அழிக்கவரும் யானையைப் பரண்மீது ஏறி இருந்து நீராடிய கூந்தலை உலர்த்தும், குறிஞ்சிப்பெண், குறிஞ்சிப் பண்பாட மூடாக் கண்ணையும் மூடி உறங்கிய யானையைக் காட்டுவதை நினைவூட்டுகிறது! (அகம்.102)

மேலும், வீணையை இசைத்துக் கொண்டு உதயணன் வீதியில் செல்ல ஊரழிவு செய்த யானை ஆணையிடும் ஆசிரியனுக்குக் கட்டுப்படும் மாணவன் போல் பணிந்தது என்னும் பெருங்கதைக் காட்சியையும் நினைவுறுத்தும்!

ஓவியக் கலையும் காவியக்கலையும் ஒன்றை ஒன்று சார்ந்து ஒன்றில் ஒன்று உயர்ந்து விளங்குபவை தாமே!