உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

191

இருபத்தாறாம் குகையில் புத்தர்பரிநிர்வாணச் சிற்பம் மனத்தைக் கவ்வுகிறது. அகத்தின் நிறைவு - முழுவாழ்வின் நிறைவு முகம் காட்டும் வகையில் சிற்பி வடித்துள்ள திறம்தான் என்ன? அவர்தம் தொண்டர்களின் அவலத்தோற்றம் என்ன! மெய்ப் பாட்டை எடுத்துக்காட்டவே பிறந்த பிறவிச் சிற்பியன் போலும் அதனை வடித்தவன்!

ஓவியம் உயர்ந்ததே! மரத்தில் இழைத்தல் அதனினும் அருமையே! செப்பில் பொன்னில் வார்த்தல் மேலும் அருமையே! ஆனால் கல்லைக் கனியாக்கிக் காட்டுகிறானே சிற்பி!

முப்பது நாற்பதடிப் புத்தர் சிலையில் எச்சிலை என்றால் என்ன - ஒரு விரலில் சிதைவு ஏற்பட்டு விட்டால்கூட அத்தனை அருமையையும் அழித்துவிடுமே! எவ்வளவு நுண்ணிய நோக்கும் தண்ணிய நெஞ்சும் கலைக்கே வாழும் வாழ்வும் உடையானாய் ஒருவன் இருந்தால் அன்றி, அவனுக்கு அவ்வடிப்புக்கலைக் கருத்தை அன்றி - வேறுவழியில் கருத்துச் செல்லா வகையில் எல்லா நிறைவும் செய்வார் இருந்தால் அன்றி - இவை உருவாக்கம் பெற்றிருக்க இயலுமா?

கலைவல்லான் ஆகிய சிற்பி ஒருவன், கண்முன்னர் அக் கலையைத் தலையும் காலும் கையும் தனித்தனி உடைக்கும் கொலைப்பிறவியன் வெறி எப்படித் தோன்றும்! தான் பெறுவதற்கு அரிதாய்ப் பெற்ற பிள்ளையைக் காலும் தலையும் சிதைத்தெறியும் கொலை வெறியனுக்கு ஒப்பாக அல்லாமல் வேறு தோற்றம் தாரானே!

அசந்தாக் குகைகள் உள்ள மலையில் பெயர் சயாத்திரி!

கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. 650 வரை உருவாக்கப்பட்டவையாம் இக்குகைகள்! அனைத்தும் பௌத்தம் சார்ந்தவை. பௌத்தத்துறவிகள் வாழிடமாகவும் சமயப் பரப்பிடமாகவும் இருந்தவை. அடர்ந்த காடும் நெடிய காலம் மக்கள் போய்வரும் வழக்கில்லாமையும் அக்குகைகள் பற்றி உலகம் அறிந்து கொள்ளாவாறு செய்தன. கி.பி.1819 ஆம் ஆண்டில் தான் இக்குகைகளின் இருப்புக் கண்டு பிடிக்கப்பட்டதாம்.

ஒரு சிலை நின்றநிலை - முப்பதடி உயரம்! அது முகப்பில் இல்லை! குகையின் குடைவின் இறுதியில் இருக்கிறது! ஏறத்தாழ