உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

நூறடி -நூற்றிருபதடிகளுக்கு அப்பால்! அச்சிலையின் இருபால் சுவர்ப் பக்கங்களிலும் சிற்பங்கள்! வண்ண ஓவியங்கள்! நீள அளவு போல் அகலம்!

வெடிவைத்துத் தகர்க்க முடியுமா? மின்னாற்றலால் துளைத் தெடுக்க அந்நாளில் வாய்ப்பு இருந்ததா? எப்படி இக்குடை வரை களை உண்டாக்கினர்! சிலையின் உயரத்திற்கு மேல் வரை குடைந்தெடுக்க வேண்டுமே! தூண்களையெல்லாம் விடுபடச் செய்து துளைக்க வேண்டுமே! தூண்களில் சிற்பங்கள் வார்க்க வேண்டுமே! முகடுகள் என்ன வண்ணமோ வார்ப்போ இல்லாமலா

உள்ளன?

எத்தனை மன்னர்கள் ஆட்சிக் காலமோ? எத்தனை உழைப்பாளர் உழைப்புத் திறமோ? எத்தனை எத்தனை சிற்பர்களின் வண்ண ஓவியர்களின் தவவாழ்வோ!

எல்லோராவைக் கண்டு பின்னே பார்க்கலாம்!

அசந்தாவை முடித்து ஒளரங்காபாத்து சென்று, மேலும் 18கல் தொலைவில் எல்லோராவை அடைந்தோம்! வெயில் என்றால், அவ்வளவு வெயில்! பொழுது இருக்கும் போதே பார்த்தும் விட வேண்டும்!

பௌத்தசமயத்திற்கே உரியது அசந்தா என்பது கண்டோம்! எல்லோராக் குடைவரைகளும் ஏறத்தாழ அதே காலத்தில்தான் தோற்ற முற்றிருக்க வேண்டும்! கி.பி. ஐந்து, ஆறு முதலாம் நூற்றாண்டு, இந்தியப் பரப்பில் உள்ள குடைவரைகள் எல்லாம் ஒப்பிட்டுப்பார்க்க ஓர் ஊடகம் நன்கு வெளிப்படுகிறது. சிறிய சிறிய வேறுபாடுகளை அன்றி, மாமல்லைக் கலைக்கோட்டம், மும்பை யானைக் குடைவரை, கோனார்க்கு கதிரவக் கோட்டம், எல்லோரா அசந்தா எல்லாம் ஒருதாய்பெற்ற சேய்களைப் போலவே உள்ளன. கோனார்க்கில் ஒரு வழிகாட்டி, 'நரேந்திர மகாராசா செய்தது என்று முற்செலவொன்றில் கூறியது பசுமையாக உள்ளது.

34 குடைவரைகளையுடையது எல்லோரா?

முக்கடல் கூடல் போல் பௌத்தமும், சைவ வைணவமும், சமணமும் அமைந்தவை.

>