உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

193

முதல் பன்னிரண்டு குடைவரைகள் பௌத்தம் சார்ந்தவை. பின் முப்பது வரை சிவனிய மாலிய (சைவ வைணவ) சமயம் சார்ந்தவை.

முப்பத்தொன்று முதல் முப்பத்து நான்கு வரை சமணம்

சார்ந்தவை.

மலைச்சரிவில் தெற்கு வடக்காக இரண்டுகல் தொலைவில் வை அமைந்துள்ளன. முப்பகுதிகளுக்கும் இரண்டு இடைவெளிகள் அமைய அமைக்கப்பட்டுள்ளன.

ஏறத்தாழ ஏற்ற மில்லாமல் அடித்தளம் தொட்டே குடை வரைகள் இருத்தலாலும் அடிவாரத்தில் மரங்கள் அமர்விடங்கள் விற்பனைப் பொருள்கள் அடுத்தே விடுதிகள் என இருத்தலால் அசந்தாவைப் போல் எல்லோரா தனிமைப்படுத்தப் பட்டுவிட வில்லை என்பதை உணரமுடிகிறது. அடிவாரம் வரை வண்டிகள் வந்து நிற்க வாய்ப்புள்ளது.

அசந்தாச் சிற்பங்கள் ஓவியங்கள் அமைப்புகள் அன்னவையே எல்லோராப் பௌத்தக் குடைவரைகள்!

சிவனிய மாலிய சமயக் குடைவரைகளில் தனிப் பெருஞ் சிறப்புடையது கயிலாச நாதர் குடைவரையாகும்! எண்ணிக்கையில் பதினாறாவது அது.

குகை

எல்லோராவில் பெரியதும் சிறந்ததும் ஆகிய குடைவரை மட்டுமன்று, இந்தியாவிலேயே உயர்ந்த அகழ்வரையாகவும் அமைந்துள்ளதாம்.

இராட்டிரகூடமன்னன் தந்திவர்மன் (735-757) முதலாம் கிருட்டிணா (கி.பி.760) முதலியோரால் சமைக்கப் பட்டதாம். அவ்வேந்தனே தொடங்கி அவனே முடித்தவனாக இருக்க முடியாது. ஏனெனில் ஒரு நூற்றாண்டு அவ்வகழ்வுப் பணி நிகழ்ந்துள்ளது. 30,00,000 சதுர அடியளவு மலையைப் பிளந்து அடிமுதல் முடிவரை கோட்டையாக்கி, கோட்டையின் உள் நடைவழியாக்கிக் கொள்ளப்பட்ட வரை அகழ்வு அஃது, பத்துத்தலைமுறை வேலை: 200 ஆண்டு முயற்சி.

உள்ளே அகழ்ந்து அகழ்ந்து தூண்கள் கோயில்கள் கோபுரங்கள் ஒவ்வொன்றிலும் சிற்பங்கள் என ஒவ்வொன்றாய்