உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

வெளிப் பரப்பில் கல் கொண்டு கட்டியது போலவும் சிற்பங் களைச் செய்து நிறுத்தியது போலவும் அமைத்து மற்றைப் பகுதிகளை அகழவேண்டும் அல்லவோ!

கொடித்தூண், பலிபீடம், காளையூர்தி, மண்டபங்கள் என எல்லாமும் அமைக்கவும். கோயில் கோபுரம் முழுவதும் சிற்பங்கள் விளங்கவும் செய்ய வேண்டுமானால் எப்படி அகழ்ந்தும் செதுக்கியும் குடைந்தும் எத்தனை ஆயிரம்பேர்கள் பணி செய்திருக்க வேண்டும்!

"இக்கோயில் 276 அடிநீளமும் 154 அடி அகலமும் 107 அடி உயரமும் கொண்டது. இக்கோயிலில் கருவறை மேற்குப் புறவாயில் நந்தி மண்டபம் திருச்சற்று ஆகியவை உள்ளன. சிவன்கோயிலாக இருந்தாலும் திருமாலின் அவதாரங்கள் இங்குச் சிற்பங்களாகச் செதுக்கப் பட்டுள்ளன.

இக்கோயிலின் கொடிக்கம்பம் 45 அடி உயரமுடையது. இதன்மேல் சிவனின் சூலம் உள்ளது. இலக்குமி பத்மாசனத்தில் அமர்ந்துள்ளாள்.

இங்குச் சிவன் காலபைரவர் வடிவத்தில் உள்ளார்.பார்வைக்கு அச்சம் தரும் இச்சிற்பத்தின் கீழ் சப்த மாதர்களின் சிற்பங்கள் உள்ளன. அருகில்சிவன் யோகி வடிவில் காட்சி தர முனிவர்கள் தேவர்கள் ஆகியோர் அருகில் உள்ளனர். இதையடுத்து மகாபாரதம் இராமாயணக் கதைகள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குக் கீழ் விலங்குள் படுத்திருக்கும் காட்சி, பாலூட்டும் காட்சி போன்றவை மிக நுணுக்கமாகச் செதுக்கப் பட்டுள்ளன. இக்கோயிலின் தெற்குப் பகுதி 12 பெரிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் பெரிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அன்னபூரணி, வராகி, திருமால், வாமன அவதாரம், நரசிம்மன், அ;ரத்த நாரீசுவார் ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத் தக்கவையாகும்". எல்லோராக் கயிலாசக் குடை வரையின் ஒரு பகுதியை வாழ்வியற் களஞ்சியம் வழங்கி யுள்ளது. மரம் இரும்பு கலவை தனிக்கல் செங்கல் என எவையும் இல்லாமல் மலையில் உச்சியில் இருந்து வைத்து வைத்து வெண்ணெயை வழித்தெடுப்பது போலக் கல்லை ஒதுக்கி வடிப்பது எளிய முயற்சியா? எளிய வேலையா? எளிய முடிப்பா?

தென்னகக் கோயில் சிலைகளைக் கண்டு திளைத்தது மட்டுமன்றி எழுத்தில் படித்த பேறும் எனக்குண்டு! மதுரைக் கம்பத் தடிமண்டபம்எத்தனை எழில் மாட்சியது! எத்தனை முறை