உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

குறிக்கொண்டு வாழும் மாந்தர் அக்குறியைப் பற்றிக் கொண்டு வாழும் போதே - பிறர்க்கு வழிகாட்டும் போதே- குறியும் குறிக்கோளும் பெருமையடைகின்றன.

குறிக்கோள் வாழ்வினைக்கொண்டவர்கள் 'தாம் குறிக்கோள் வாழ்வினர்' எனக் கூறினார் அல்லர்! செருக்குற்றார் அல்லர்! அவர் குறிக்கோள் வாழ்வினர் என அக் குறிக்கோள் பற்றுமையுடைய வரால் கண்டு கொள்ளப்பட்டனர். அதனைப் பரப்புதல் தம் கடன் என்றும் கொண்டனர், தத்தம் திறவகையால் பரப்பாளர் ஆயினர். குறிக்கோள் வாழ்வரைப் பரப்புதலைத் தம் குறிக்கோளாகக் கொண்டனர். அக்குறிக்கோளை ஏற்றுப் போற்றி நலம் பெறுவார் பெறும் நலமே தாம் பெறும் நலம் எனவும் கொண்டனர். அன்றிப் புகழ், பொருள், போற்றல் என்னும் நாட்டத்தராய் இருந்தார் அல்லர்! அவர் புகழ் பொருள் போற்றல் எல்லாமும் அக்குறிக்கோள் வாழ்வர்க்குப் படையலாக்கத் தம்மை முழுதுறு ஒப்படைப்புச் செய்தவராகவே இருந்தனர்.

குறிக்கோளர் விரும்பாத போற்றுதல், குறிக்கோள் பரப்பாளர் விரும்பாப் பயன் எதிர் நோக்கு இன்மை என்பன பலப்பலரை ஊக்கின, கிளரச் செய்தன; கருத்துவகையால் பரப்புதல் தொண்டு மேற்கொண்டனர்; அவருள் பாவிகர் சிற்பர்ஓவியர் இசைஞர் எனச் சிலர் விளங்கினர். அவரவர் திறம்வாய்ப்பு சூழல் ஆயவற்றுக்கு ஏற்ற வகையில் உலகம் காலமெல்லாம் கூட்டுண்ணத் தக்க அரும் பெறல் படைப்புகளை ஆங்காங்கே உருவாக்கினர்.

உருவாக்கும் வல்லார்க்கும் ஊணே, உடையே, உதவியே. உறைவே எனத் தேவைகள் உண்டே! இயற்கைத் தேவையாம் பசிப்பிணியோடு தானே எவ்வெவ்வுயிர்ப்பிறப்பும்பிறக்கின்ற. அத்தேவை இறுதிமூச்சு உள்ளவரை உண்டே! அதற்கென அவர்கள் தம்பொழுதைச் செலவிடின், உலகுக்குக்கிட்ட வேண்டும் நலப்பேறு குறையக் கூடுமே என்று எண்ணிய நிறைமனத்தர், தூய தொண்டர் குழாமாக முகிழ்த்தனர். அவர்கள் தம்மை அவ்வல்லார்க்கு உதவுதலே பிறவிப் பேறு எனத் தீர்மானித்துத் தம்மையே ஒப்படைத்தவர் ஆவர்.

குறிக்கோள் வாழ்வர்க்கு பரப்பு நர் வாய்த்தால் போல்,

பரப்புநர்க்குப் புரப்புநராய்த் தொண்டர் அமைந்தனர். இந்நிலையில் குறிக்கோள் வாழ்வர், பரப்புநர், தொண்டர் என்னும் பெருநலத்தர் முப்பால் ஆயினர்.