உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

197

இம்மூவகையரும் முக்காலியின் கால்களை அனையர்! அவ்வவ்வகையால் அவர்கள் சிறப்பினர். எனினும் குறிக்கோளராம் முன்னவரே மூவர்தம் மூச்சாகவும் பேச்சாகவும் இருந்தனர். ஆனால் அவரவர் கடமையே கண்ணானவர். பின்னிருவகையாருள் எவரும் "வருக, உதவுக, பயில்க, புரிக" என அழைக்கப்பட்டுத் தேடிக் கொண்டவர் அல்லர். தாமே ஒருவரை ஒருவர் தேடிக் கண்டு கொண்டு ஒன்றியவர்.

இம்முக்கூட்டுப் படைப்பே பெரும் பெரும் கலைக் கூடங்களாய் அமைப்புகளாய் நிறுவனங்களாய் -காலமெல்லாம் உலகைக் கைகாட்டி அழைத்துக் கண்டு திளைக்க வைக்கின்றன! இல்லையேல் ‘புத்தர் அருகர்’ முதலோர்க்கும், நமக்கும் உள்ள ஊடகம் இல்லாமல் போயிருக்கும் அல்லவோ! அசந்தா எல்லோரா குடைவரை சிற்ப ஓவியங்கள் கூவாமல் கூவி அழைத்து, கூறாமல் கூறி நிற்கும் குறிப்புகள் இவையாம்.

மராத்திய மண்ணை உலகப் பார்வைக்கு ஆக்கும் கலங்கரை விளக்கங்கள் அசந்தா எல்லோரா என்பதை ஒவ்வொரு நாளும் வந்து குவிந்து காணும் உலகரைக் கண்ட அளவானே புலப்படும்! இப்புலப்பாட்டில் புன்முறுவல் பூப்பவர் குறிக்கோளார் பரப்புநர் பஷபுரப்புநர் என்பர் மூவராம்! மனனர்என்ன, மக்கள் என்ன அவரெல்லாம் இல்லாமல் இப்பேறுவாய்த்திருக்குமா? வாய்திராது என்பது மெய்யே! அவர் எதனால் ஈடுபட்டுக் கடனாற்றினார்? குறிக்கோளர் பரப்புநர் இல்லாக்கால் அவர் அறிதற்கு வாய்ப்பு ஏது? உதவும் பேறு ஏது? புரப்பநராம் வேந்தரும் மக்களும் மேம்பட்ட கடப்பாட்டினரே எனினும் குறிக்கோளர், பரப்புநர் என்பாரைச் சார்ந்த பேறு வாய்த்தவரே ஆவர், முக்காலியின் எக்காலாய் இருந்தால் என்ன?

புத்தர் அருகர் வாழ்ந்த நாளில் அவர்களைக் காண்பார் கண்டனர்: வாய்த்தார் உரையாடினர்: ஒன்றினார் உடனாகினர்: புத்தர் அருகர் உரையை வாழ்வை -அணுக்கர் வரைந்தனர். அதனைப் பரப்பினர்: கூட்டம் கிளர்ந்தது: புத்தர் அறம் வழிபடு பொருள் ஆயது!

புத்தம்கரணம் கச்சாமி! சங்கம் சரணம் கச்சாமி! தன்மம் சரணம் கச்சாமி!