உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

புத்தத்தை வழிபடுகிறேன்: சங்கத்தை வழிபடுகிறேன்; தருமத்தை வழிபடுகிறேன்! இவற்றைக் கொண்டவர் 'கோலம்' 'கொடி' 'கொள்கை' எனக் கொண்டனர்! அவர்கள் ஒரு கூட்டம் எனத் தொடக்கத்தில் இருந்தனர். அவர்களின்ல பழையது புதியது எனப் பிளந்தது! பழைய பாணி வேறு! புதுப் பாணி வேறு! கிறித்தவத்தில் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என இரண்டு இல்லையா, அப்படியே ஆயிற்று!

கொள்கையைப் பற்றிக் கவலைப்படாமல் கூட்டத்தைப் பெருக்கலே குறியான பின்னர்க் கொள்கை கொள்ளை போய்விடும்! கொண்டு நிற்பாரைக்கண்டு பிடிக்க நுண்பெருக்காடி தேவைப் படலாம் விண்மீனைக் கண்டு கொள்ளவல்லாரும் காணாப் பொருளாகக் கொள்கை போய்விடும்!

-

அந்நிலையிலும் எந்நிலையிலும் கற்றாரும் கல்லாரும் உள்ளாரும் இல்லாரும் எல்லாரும் பழஞ் செய்தியையும் பழையர் வடிவங்களையும் கண்டு நினைவு கூர, உதவும் அரிய கலை சிற்பமும் ஓவமுமாம்!

என்னதான் கொடுஞ்செய்கையர் சிதைத்தாலும் அச் சிதைவுக்கும் ஈடு கொடுத்தும், காலக் கழிவும் பருவ மாற்றமும் ஏற்பட்டாலும் அவற்றுக்கு ஈடு கொடுத்தும் இன்றும் தாம் உள்ள மண்ணுக்குப் பெருமை சேர்ப்பதாய் உள்ளவை குடைவரைகளும் வண்ண ஓவியங்களும் சிற்பங்களும் ஆம். இவற்றை மீடெடுத் தோரும் காத்துவருவாரும் நினைவு வரத் தக்கவராம்!

மற்றைச் சுற்றுலா இடங்களைப் போலவே கையேந்தல், மறித்து மறித்து வணிகம், உணவு, வழிகாட்டி எனத் தலையிடல் உள்ளனவே! இந்திய மண்ணை விட்டு இவ்விழிவரல் ஒழியாமல் சுற்றுலாக் காட்சி என்னவாகவே இருந்தாலும் இறுதியில் இவ் விழிமையே எஞ்சுகின்றதாம்! உலக நோயாகத் தோன்ற வில்லை! தமிழக நோயாக மட்டுமில்லை! இந்திய நோய் எனவே நீக்கமறக் காண்கிறது!

26.02.2009

எந்நேரம் படுத்தாலும், எழும்பும் நேரம் 5 மணி என்பது தெளிவாகப் பழகிப்போனது. அப்பழக்கம் வழக்கமாய் ஒழுக்கமாய்ப் போய நிலையில் மாறுமா?