உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

199

ஐந்துமணிக்கே எழுந்து செய்யும்கடன்களையாற்றி அன்றைத் திட்டம் மேற்கொள்ளல் வேண்டும். இன்று 'கங்கை கோதாவரி' தோன்றுமிடம் காணப் போகிறோம் என்றும் காலையில் 10 மணிக்குப் புறப்படல் வேண்டும் என்றும் முதல் நாளே திட்டப் படுத்தியிருந்தனர். அசந்தா, எல்லோரா சென்ற நால்வரே இச்செலவும் மேற்கொள்ளத் திட்டமிட்டும் கலை நிதி வேலாயுதர் தம் கடமை அழுத்தத்தால் வரக் கூடவில்லை. மூவராகவே சென்றோம். மகிழ்வுந்து ஓட்டுநர், அருள் சரவணர் மாட்டுப் பேரன்பர். வழிவகை நன்கு தெரிந்தவர்; பண்பு மிக்கார்; அவரைப் போலவே அவர் மகனார்; புகைக்குடியும் இல்லாப் பெருமை, புன்முறுவலை அன்றி முகம் சுண்டா அமைதி வாய்க்கப் பெற்றவர். காணவேண்டும் காட்சிகளைக் காட்டலில் பேரார்வம் உடையவர். அவர் எங்களை அழைத்துக் கொண்டு 'தேவலாலி' சென்றார். எங்களுடன் வந்த அருள்மொழியார் அவர் அலுவலகத்தில் இறங்கிக் கொண்டார். அங்கிருந்து 'வால்தேவி' என்னும் ஊர்வழியாகக் கங்கை கோதாவரி தோன்றுமிடம் நோக்கிச் சென்றோம்!

சூழலெல்லாம் மலை; அடிவாரம் கோயில்; பிற சூழலெல்லாம் குடியிருப்பு; அங்காடி; தெப்பம் தேர்; சிறுகோயில் பெருங்கோயில் தங்கல் விடுதிகள்; ஊணகங்கள்; சுற்றுலா வளாகத்திற்குரிய அனைத்தும் கொண்டது அது.

கோயிலை அடுத்த தெப்பக்குளம் தான் கங்கை கோதாவரி தோன்றுமிடமாம்! அதனைக் காணும் வரை என் எண்ணத்தின் பதிவு வேறு!

குற்றால அருவி, பாபநாச அருவி, சுருளி, கும்பக்கரை, வையை வளநாடு, செய்பகத் தோப்பு, கொல்லி புளியஞ்சோலை என எண்ணிய எண்ணம் ஒரு தெப்பக் குளத்துள் அடங்கி விட்டது! மழைக்காலத்தில் மலையருவி உண்டு என்பது புலப்பட்டது, ஆறும் காணமுடிந்தது. பரைய கோயில் சிறிய அளவினது; சுற்றுச் சிறு கோயில்களும் உண்டு. புதிய கோயில் வளாகம் பெரிது; ஓட்டுநர்பார்த்து வரக் கூறி வழிகாட்டினார். அடுக்கடுக்கான தடுப்புகள் நான்கு வரிசை ஒவ்வொரு வரிசையிலும் ஒருநூற்றுவர்க்குக் குறையாமல்! ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நின்றோம், சரோசினியார் விருப்பம் கருதி எந்நேரமானாலும் பார்த்துச் செல்வது எனநின்றோம் 'சிவலிங்கம்'! முன் 'ஏறு'