உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"10 டாலர்"

1. அவன் யார்?

"20 டாலர்'

"40 டாலர்"

"உடல் கொழு கொழு வென்றிருக்கிறது. நன்றாக உழைக்கத் தக்க பருவம். எங்கெங்கே தேடினாலும் இப்படியொன்று கிடைக்கவே கிடைக்காது. கூட்டிக் கேள்”

75 டாலர் '

15

"ஒரு தரம்; கேட்பவர் இல்லையா? இரண்டுதரம்"

80 டாலர்'

66

யோ! என்னிடம் எழுபத்தைந்து டாலர்கள் தாமே இருக்கின்றன. கூட்டிக் கேட்டு விட்டானே அவன்"

"கெடுத்துக் கொண்டாய் நீ! இப்படி யொரு நல்ல கூலி கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்கில்லை. இரண்டு ஆண்களுக்குப் பதில் இவள் ஒருத்தியே போதும். இப்படி முறுக்கேறிய நீக்ரோக் கூலி நிச்சயம் கிடைக்கமாட்டாள்."

'பணத்தைக் குறைத்துக் கொண்டுவந்து பாழ்படுத்திக்

கொண்டேன்."

இவ்வாறு கூட்டத்தினர் பேசிக் கொள்வதற்குள் ஏலம் போடுபவன் "மூன்றுதரம்" என்றான். முடித்து விட்டான்!

ஆடு மாடுகளை ஏலம் போடுவது போல -அங்காடிகளிலே துணி மணிகளை ஏலம்போடுவது போல-அடிமையாக்கப்பட்ட நீக்ரோப் பெண் ஏலம் போடப்பட்டாள், அமெரிக்க நியூயார்லி யன்சிலே! சுதந்திர மக்கட் பிறப்பெய்திய அவள் சாகுமட்டும் அடிமை! விலைக்கு வாங்கியவன் விலங்கிடுகின்றான்; மாட்டுக் கொட்டிலுக்கு “மட மட வென இழுத்துச் செல்கின்றான்.