உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

இதனைக் கண்டு கொண்டு நிற்கின்றான் ஓர் அருளாளன். "மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கமா?” என்று தன்முகத்திலே சப்பிக்கொண்டு கண்ணீர்த் துளிகளைச் சொரிகின்றான். அக் கண்ணீர்த் துளிகளையே கறுப்பு மையாகக் கொண்டு இதய ஏட்டிலே எழுதிக் கொள்கின்றான். "என்றேனும் ஒருநாள் இந்த அடிமை முறையை ஒழித்துக் கட்டியே தீருவேன். அடிமைமுறை தகர்க்கப்படாவிடில் யான் பிறந்ததால் இவ்வையகத்திற்குத் துளியளவாவது பயனுண்டா? அடிமை முறையை அகற்றுவதே என் இலட்சியம்!" என்று முழங்கிக் கொண்டே அடிமை விற்பனைக் கிடங்கை விட்டு அகல்கின்றான் அந்த இளைஞன்! அடிமை வேட்டை

ஆப்பிரிக்கக் காடுகளிலே சதந்திரமாகச் சுற்றியலைந்து கொண்டிருந்த நீக்ரோக்களை விலங்குகள் போலாக வேட்டையாடி, கைக்கும் காலுக்கும் விலங்கிட்டுப் பண்ணைகளிலே பணிபுரியும் நிரந்தர அடிமைகளாக ஆக்கி வந்தனர் அமெரிக்கர். நீக்ரோக் களைப் பிடிப்பதற்காகவே எத்தனையோ சங்கங்கள் ஏற்பட்டன! அடிமை விற்பனைக் காகவே வியாபாரக் கிடங்குகள் அநகேம் கிளைத்தன! வளைத்துப் பிடித்துவரும் வலியவனுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கினர் பண்ணையாளர்! அரசாங்கமோ அடிமைப் பண்டங்களைக் குவிப்பதற்கு வழிவகைகள் செய்து கொண்டிருந்தது. வெள்ளையர் கூட்டம் ஒன்று வெளிப்படுகின்றது என்றால் குலைபதறித் தப்பியோட முயல்வான் நீக்ரோ! துப்பாக்கிக்குத் தப்பிச் செல்ல வழியின்றித் தலைகுனிவான்! மானம் உண்டு; வீரமும் உண்டு, நீக்ரோவினிடம்! ஆனால் கனல் கக்கும் குண்டுக்கு முன் அவன் என்ன செய்யமுடியும்?

அடிமை முறை அமெரிக்கா முழுவதிலும் கைக்கொள்ளப் படவில்லை. தென்னாட்டிலே அடிமையர் கட்டுப்பாடு; வடநாட்டிலே அடிமையர்க்குச் சுதந்திரம்.ஒரே நாட்டிலேயே இரு வேறு கொள்கைகள்! தென்னாட்டிலேயிருந்து நாள்தோறும் அடிமையர் வடநாட்டிற்கு ஓடிய வண்ணமாக இருந்தனர். இப்படியே ஓடிக் கொண்டிருந்தால் பண்ணைகள் என்னாவது? பண்ணையையே நம்பி வாழும் பண்ணையாளர் என்னாவது? பண்ணையாளர் வாழ வழி வகுக்கும் அரசாங்கம் தான் என்னாவது? தன் வயிற்றில் தானே மண்ணடித்துக் கொள்ள விரும்புமா அரசு! அதற்கும் ஒரு சட்டம் செய்து கொண்டது!