உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

செழுமையில் வைக்கப்பட்டுள்ள வையக வளங்கள்!

1

வை - வையம் வைப்பு - வைப்பகம் - வைப்புழி என்று

மண்ணுக்குப் பெயர் சூட்டிய தமிழ்த் தொல்லோர் அறிவும் திறமும் அப்பளிங்கு உருவாகவே தோன்றுவனவாம்! அங்குள்ள மண் கனிமங்கள் விலையே மதிப்பிடற் இயலாதவை என்னின் உலகத்துள்ளவை யெல்லாம் எவ்வாறு அளவில் அடங்கும்?

மண்ணின் கல் மட்டுமன்று விண்ணின் கல்லும் (திங்களில் இருந்து கொண்டு வந்தது: சிறியதே எனினும்: எத்தகைய அரிய முயற்சியில் கொணர்ந்தது அது) காட்சியில் உண்டு. பலப்பல சிற்றறைகள் - அரங்குகள் - மாடிப்பகுதி எல்லாம் கனிம வளம்! ஊடுவெளியரங்கிலும் கண் கொள்ளாக்காட்சி!

விற்பனைப் பகுதியும் உள்ளது! வேலாயுதனாரும் சரோசினி யாரும் விரும்புவ வாங்கினர். நாசிக்கின் ஒருபகுதியில் ஞாலவளம் குவிந்து கிடக்கும் பகுதியொன்றும் உண்டு என்பதை அறிய வாய்த்தது.

இவ்வரிய கனிமங்களைத் தொகுத்து வைத்த தோன்றல்கள் எவர் என்றறியும் அவா உண்டாதல் இயற்கை! போற்றத் தக்க அப்புகழாளர்கள் இருவர். ஒருவர் எசு.பி. பாண்டே! மற்றொருவர் ஆர்.சி.பாட்டாக்கு!

இருவரும் கனிமவளப் பொறிஞர்!

"தோன்றிற் புகழொடு தோன்றுக' என்பதைத் தாம் தோன்றிய துறை வகையால்மெய்ப்பித்த அவர்கள் அக் காட்சியைக் கண்டு மகிழ்வார் உள்ளங்களில் புகுந்து கொள்கிறார்கள். கலைகளில் ஓர் அரிய கலை தொகுப்புக் கலை! பணம் தொகுத்தல் தான் மக்கள் பார்வையில் பெருவரவாகவும் புகழுக்கு உரியதாகவும் தோன்றுகின்றது. தொகுப்புகளில் எளிதாக எவரும் செய்யக் கூடியது பணத்தொகுப்பு. தேவையானது கட்டாயமானது என்றாலும் அத்தொகுப்பு பெரிதும் அறத்தின் வழியோ அருளின் வழியோ முழுதுறு உழைப்பின் வழியோ ஈட்டப்படுவதன்று. கரவு வழி - கலப்பட வழி பிறரை வாட்டி வதைத்தல் வழி எனப் பரியாம் வழிகளால் பொருள் தொகுப்பு நிகழ்வது தெளிவு! ஆனால் பாடாக்கு, பாண்டே போலக் கலை நல, உலகநல, அறிவு நலத் தொகுப்புகளின் சிறப்பு, மாணச் சிறப்பினதாம்.

-