உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

201

இவ்வளக் கோதாவரி தோன்றுமிடம் இது என்னும் போது நம்பத்தான் வேண்டும்! ஆனால், கால - பருவ - மக்கள் இயற்கையழிப்பு என்பவற்றை எண்ணுதற்கு ஏவாமல் இல்லை!

எங்கே போகிறார் ஓட்டுநர்! பொழுதோ போகி விட்டது!

அருளார் காத்துக் கொண்டிருப்பார்! வினாக்களின் மேல், வினா!

அரசு-

வண்டியை ஓர் எழில் வளாகத்தின் முன்னர் நிறுத்துகிறார் ஓட்டுநர்! அமைதி என்றால் அமைதி! ஆளே இல்லையா? தேடி வருவார் ல்லையா! கோயிலில் வட்டம் - இடிபாடு - காத்துக் கிடக்கை! திகைப்போடு நோக்கினால் கனிமவள அறிவியல் காட்சியகம் அது! ஐம்பது உருபா நுழைவுச் சீட்டு! நுழைந்த அளவில் முகப்பு வளாகத்தில் கண்ட காட்சிப் பொருள்கள், இதனைக் காண நுழையாதிருந்திருந்தால் ஒரு பெரிய காட்சிவள இழப்பை அடைந்ததாக ஆகியிருக்கும் என்னும் எண்ணத்தை எழுப்பியது. ஏறத்தாழ ஒன்றரை மணிப் பொழுது சுற்றி வெளியேறும் வரை ஒவ்வோரிடத்தும் அவ்வெண்ணமே முல்லை முகிழ்ப்பாக முறுவலித்து நின்றது.

அப்படி என்ன அரிய காட்சி!

மண்ணின் கொடைவளம் எந்தக் கணக்காளியினாலும் மதிப்பிட்டுக் கூற முடியாது என்பதே!

ஒருவிரல்-இருவிரல (அங்குல) நீள அகலப்பளிங்குக் கற்கள் பத்தாயிரம் பதினைந்தாயிரம் விலை! விற்பனைப் பிரிவில் கண்டது இது காட்சிப் பகுதியில் பன்னூறு பேழைகளில் அதனைப் போலப் பன்னூறு பல்லாயிர மடங்குப் பெரிய பளிங்குப் படிவங்கள்!

நிலவின் திரட்டுருண்டையா? வெண்ணெய்ப் படிவமா, பாறையா?

கதிரவனைப் பிட்டுப்பிட்டு வைத்த கவினா?

எல்லாம் மண்ணுள் தோண்டி எடுத்த மாண்விலைக் கற்கள்! ஓரிடத்துக் கல்லா?

உலகத்தின் பரப்பில் கிடைத்த கற்களையெல்லாம்

ஒருங்கு திரட்டி உரிய இயற்கை மாறாச் செயற்கைச்