உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

207

என்று கூறியதை, "எனது வாழ்வின் எல்லாக் கார்யமும் இதயத்தை ணைக்கும் என்று ஒரே உத்தேசத்தினால் பிரேரணை ஆனது என்று தமிழில் பெயர்த்துள்ளனர்.

முழுவதும் சீராகப் பேணப்படுதல் இல்லையெனினும் ஓரளவு கேடின்றிப் பாதுகாக்கப்படுகிறது. அடிகள் பயன்படுத்திய பொருள்கள் காட்சியில் உள்ளன. அவர் வரலாற்று விளக்கப் படங்கள் வழக்கம் போல் இடம் பெற்றுள!

உள்ளே ஊண் கொள்ள ஏந்துகள் இல்லை எனினும் நிலையத்தின் முன்புறம் சற்றுலாத் துறை விடுதி ஒன்று நன்முறையில் உணவு வழங்குகிறது.

பெட்டிஇராட்டை ஒன்றனை அதன் உருவாக்க இடத்திலேயே வேலாயுதர் வாங்கினார். பேரர்கள் சாரல், அருவியர்க்காக! பயின்று நூற்க வேண்டும் எனக் காத்திருக்க முடியா இளமை! ஓடும் வண்டியிலேயே உருட்ட விரும்புகிறது! உறைவிடத்தில் கேட்க வேண்டுமா?

அகமதாபாத்தில் இருந்து உதயபூர் சென்று தங்குவதாக எங்கள் ஏற்பாடு! போகிறது, போகிறது, சாலை போகாமல்என்ன செய்யும்! உந்தும்போகிறது 250 கி.மீ! இரவு 10.30 க்கு உரிய இடம் சேர்தல்!

படைத்துறை வளாக விருந்தினர்விடுதிதான்! இரவுப்பொழுது ஆனாலும் தட்டாமல் உணவு கிடைத்தது! காலைச் சிற்றுண்டியும் அங்கே முடித்துக் கொண்டு நகரைச் சுற்றத் தொடங்கினோம்.

28.02.2009

வரலாற்றுச் சிறப்புமிக்க உதயபூர், இராசத்தானத்துப் பெருநகர்களுள் ஒன்று. மேவார் அரசின் தலைநகராக இருந்தது.

சபர்மதிக் கரையில் அகமதாபாத்து அமைந்தது போல இல்லை எனினும் கடலென்ன விரிந்த பிச்சோலா ஏரிக்கரை யில் அமைந்துள்ளது.

இங்குள்ள இராணாவின் அரண்மனை விரிவுமிக்கது; அழகியது; பலப்பல பகுதிகளையுடையது.

கடலின் இடையே நிற்கும் பாரிய கலங்களைப் போல சகமந்திரத்தீவில் குல்மகால் கட்டடமும். பேரேரியில் சகநிவாசம்