உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

கத்தூரிபா தங்கிய இடம் சமையல் கூடம் பொருள் வைப்பறை என மிக எளிய அமைவான இடங்கள்

ஐன்சுதீன், "இப்படி ஒருவர் வாழ்ந்தார் எனின் உலகம் நம்பாது" என்று காந்தியடிகளைப் பற்றிக் கூறிய உயர்வு மூலம் இவ்வெளிமை என்பது புலப்படச் செய்வது. உடைமாற்றத்தின் முன்பும் பின்புமான தோற்றம் மணிவாசகர் அமைச்சுக் கோலமும் துறவுக்கோலமும் ஆவுடையார் கோயில் சிற்பமாகக் காட்சி வழங்குவது போல் வழங்குகின்றது.

மதன் நிவாசு என்பது மதன்லால் என்பார் வாழ்ந்த இடம். அவர் தென்னாப்பிரிக்கத் தொண்டராக இருந்தவர். சபர்மதி நிலையப் பொறுப்பாளராக இருந்தவர். அவர் மறைவு காந்தியடி களை அசைத்தது உருக்கியது (1928) ஆதலால் தம் தனிமை இரங்கலைப் புலப்படுத்தும் நிலை நம்மை நம் தொல்காப்பியத்திற்கு இழுத்துச் செல்கின்றது.

மனைவியை இழந்தார் நோன்பு வாழ்வு 'தபுதாரம்’ கணவனை இழந்தார் நோன்பு வாழ்வு 'தாபதம்' காந்தி, மதன்லால் இழப்பை,

"His death has widowed Me"

என்கிறார். விநோபா பாவேயும் இங்கே தங்கியுள்ளார். தண்டிச் செலவு (12.03.1930) இங்கிருந்து தொடங்கப்பட்டுள்ளது. காந்தியடிகள் 1918 முதல் 1930 வரை "இருதய கஞ்ச்' என்னும் பெயரிய மனையில் வாழ்ந்துளார்.

"என் வாழ்வே உலகுக்குச் செய்தி"

(My life is my message)

என்று எழுதிய காந்தியடிகள் குசராத்தி, ஆங்கிலம், இந்தி, உருது, தமிழ் எனத்தம் கையெழுத்தை இட்டுள்ளார். 11 மொழிகளில் கையொப்பம் இட்ட இடிகள் ஐந்தாம் இடத்தில் மோ.க.கா என்று பொறித்துள்ளார்.

விநோபா தம் செய்தியாக,

"Throghout my life all my Activities have been motivated by the single

Glycetive of uniting hearts"