உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

205

செல்லும் சாலையெல்லாம்'சுங்கம்'! தணிக்கை! நுழைவுக் கட்டணம்! படைத்துறைத் தங்கல் வளாகக் கண்காணிப்பு! அந்த முகப்பைக் கண்டு தாமே வழிவிட, காண இடத்துக் காட்டிமேலே செல்ல ஒரு நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் உதவிய பேறு சரவணரும் அருள் மொழியரும் எங்கள் உடன்வரும் உணர்வையே உண்டாக்கிக் கொண்டிருந்தது! படைத்துறை விருந்தில்லங்களில் தானே தங்கவும் உணவு கொள்ளவும் ஏற்பாடு முந்துறச் செய்திருந்தனர்.

புறப்பட்டது இரவு 11 மணி: யான் ஓட்டுநருடன் முழு விழிப்பன்! தாத்தாவும் பேரரும் அவ்வப்போது படுக்க -விழிக்க - ஆயினர். விடிகாலை 5 மணி அளவில் ஓரிடத்தில் நிறுத்தி ஓட்டுநர் தேநீர் பருகினார்! ஆமதா பாத்துக்குப் பகல் 1 மணி ஆயிற்று! தூய மரக்கறி யுணவுக்கடை எனச்சாலை வழிக் கடைகள் பலப்பல உள. அவற்றுள் ஒன்றில் பகல் 10 மணியளவில்சிற்றுண்டி கொண்டோம்! சாலைக் கடைகள் 10 மணிக்கு மேல் தான் விழிக்கும் போலும்! பத்துக்குத்தான் வயிறு இருப்பது நினைவுக்கு வரவேண்டும் போலும்!

புறப்பட்டு ஒருமணிநேரம் வண்டி யோடியபின் வந்தது ஏற்றம் இறக்கம் மேடு மலைச் சரிவு ஆறு ஓடை முதலாயின! நருமதை ஆறும் தாண்டி அகமதாபாத்தை அடைந்தோம்.

குசராத்து மாநிலத்தின் தலைநகர் அகமதாபாத்து. சபர்மதி ஆற்றின் மேல்கரையில் அமைந்துள்ளது. மும்பைநகருக்கு வடக்கே 451 கி.மீ. தொலைவு. இதன் பழம்பெயர் கருணாவதி.

குசராத்தை ஆட்சி புரிந்த சுல்தான் முதலாம் அகமதுசா (கி.பி.1411) என்பவரால் அமைக்கப்பட்டதால் அகமது நகர் ஆயது.

பஞ்சாலையால் பெருமையுற்ற அகமதாபாத்து மசூதி களாலும் பெயர் பெற்றது. இங்கே உள்ள சும்மா மசூதி பெரிய மசூதியாம். அகமது நகருக்கும் இந்திய விடுதலைக்கும் உள்ள தொடர்பு சபர்மதி என்னும் காந்திய நிறுவனத்தால் விளங்கும். ஆற்றங்கரையில்அந்நிறுவனம் அமைந்ததால் ஆற்றின் பெயரையே கொண்டது. சபர்மதி நிலையம், 25.05.1915 இல் தொடங்கி 17.06.1917 இல் கட்டடப்பணி நிறைவாகியுள்ளது.

காந்தியடிகள் கத்தூரிபாவுடன் 25.05.1915 முதல் 12.03.1930 வரை இங்கே தங்கியுள்ளார்.