உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

'கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும்"

என்பது அப்பாட்டு!

211

பாடியவனோ வசைபாடக் காளமேகம் என இசைபெற வாழ்ந்தவன்! அவன் பாட்டைக் கேட்ட காத்தான் என்ன நேருமோ அறம் பாடிவிட்டானே என நொந்தான்! அவனை மகிழச் செய்யும் வகையில் பொருள் கூறினானாம் காளமேகம்! பொழுது மறைய அரிசிவரும்; குத்தி உலையில் அரிசியைப் போட ஊரடங்கு பொழுதாகி விடும்! ஓரகப்பை சோறு இலையில் போட விடிவெள்ளி தோன்றும் என்று கூறிய பாடலை; உலை ஏற்றினால் ஊர் முழுமைக்கும் நிறைவாக இருக்கும்! இலையில் இட்ட சோறோ விடிவெள்ளி நிறம் போலப் பளிச்சிட்டுத்தோன்றும் என்று பொருள் கூறினானாம்; புலமையாளிக்கு இத்தகைய மினுக்கு வேலை செய்தல் எளிது என்பதைக் காட்டும் நிகழ்வுகள் வேறு சிலவும் உள

வேகாத அரிசிச் சோற்றை விலக்கி விட்டு ஏதோ உண்டு புறப்பட்டோம்! வேலாயுதர்க்கும் சாரலுக்கும் தயிரும் இனிப்பும் இருந்தால் போதும்! இருக்கவே இருக்கிறது நொறுக்குத் தீன்க் பழவகைகள்! ஒருகையும் வாயும் பார்த்துக் கொள்ளலாம்!

கொண்டைக் கடலைச் செடியைக் கண்ட வேலாயுதர் ஓட்டுநரிடம் பத்து உருபா கொடுத்து வாங்கிவரச் சொன்னார்! என்ன இப்படியொரு குழைக்கட்டு -ஆட்டுக்கா மாட்டுக்கா என்று நோக்கும் அளவில் ஓட்டுநர் கட்டாக வேலாயுதரிடம் வழங்கினார்.

கொண்டைக் கடலைக்காய் செடியோடு பச்சையாய்ப் பறிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது! இயற்கைக் காதலர் விட்டு வைப்பாரா? இது கிடைக்குமா? என்றார் நாங்கள் ருவரும் மேய்ந்தோம்! எனக்கும் அவர் காதலில் ஓரளவு காதல் உண்டு!

சாரலுக்குச் சுவைநீர்ப்புட்டி, இன்தயிர்! ஓட்டுநர்க்குக் காயைப்பறித்து உரிக்கவும் தின்னவும் இயலுவதில்லையே!

சோத்பூருக்குச் சுற்றில்லா ஒரு வழி இருப்பதை நாங்கள் ரவு தங்குதற்கு ஏற்பாடு செய்த தமிழன்பர் தாமாதரனார்