உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

கூறினார். அவ்வழி தலைமைச் சாலையை விடுத்து ஒரு குறுக்குச் சாலை வழியே வந்து மீண்டொரு சாலையை விடுத்து ஒரு குறுக்குச் சாலை வழியே வந்து மீண்டொரு தலைமைச் சாலையில் சேரும் வழி காடு செடி எனப் பரந்து விரிந்த பகுதி. அங்கே வரும் போது வேலாயுதர் இறங்கினார். ஓட்டுநரும் உடன் இறங்கினார்.

நம் ஊரில் காணமுடியாத கள்ளிவகை இது" என் கொடிக்கள்ளி ஒன்றன் கிளைகளைப் பறித்துக் கொண்டுவந்தார் வேலாயுதர். அரிய செடி கொடி மரவகை கிடைத்தாலும் அவற்றைத் தெரிந்து தம் தமிழ் நெறிப் பண்ணையில் உருவாக்க விரும்புபவர். அவ்விருப்புத் தலைதூக்க அடுத்தடுத்த ஊர்களில் கிடைப்பது போல எடுத்துக் கொண்டார்! முன்னரே எடுக்க நினைத்தாராம்! அவ்வாறு அரிய வித்துவகை சில எடுத்தும் வளர்க்கிறார். நம்மவர் பெரிதும் அழிய விட்டுள்ள தினை, வரகு, சாமை குதிரைவாலி, காடைக் கண்ணி, கல்லுப் பயறு, மின்னிப்பயறு முதலியவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஊன்றியவர் அவர்.

அவர் கள்ளிக் கொத்து பறித்து ஆங்கிருந்த ஒருவரிடம் உரையாடி வரும் வரை யான் கொண்டைக் கடலையை உரித்துப் பயறாக்கிச் சாரலுக்கு வழங்கினேன். மறுக்காமல் வாங்கி உண்டான்! ஒன்று புரிந்தது காய் பிரிக்க, தோல் உரிக்க மனம் இல்லை என்பது புலப்பட்டது. இருவரும் பேசத் தொடங்கினோம்.

இந்த மரம் செடி கொடிகளுக்கு உயிருண்டா என்றேன். உயிர் இருக்கிறது என எண்ணிப் பார்த்துச் சொன்னான். நமக்கும் உயிர் இருக்கிறது: இதற்கும் உயிர் இருக்கிறது: நம்மைப் போல் பேச வில்லையே ஏன் என்றேன்.

வாயில்லை என்றான். நீரையும் காற்றையும் உறிஞ்ச வாய் இல்லாமல் முடியாது! ஆதலால் வேரிலும் இலையிலும் காற்று வெயில் நீர் உரம் உள்வாங்கும் வாய் உண்டு என்பது புலப்படுகிறது அல்லவா என்றேன். அவற்றுக்கு மொழி இல்லை என்றான்!

ஆம் மொழி இல்லை. அது மெய்யறிவு என்னும் முதலறிவு மட்டுமே உடைய உயிர். நாம் ஆறறிவு உயிர்! மெய்யறிவு வாயறிவு கண்ணறிவு மூக்கறிவு செவியறிவு என்னும் ஐந்தறிவொடு சிந்திக்கும் அறிவாம் மன அறிவும் உடையவர்