உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

213

நாம் இந்த அறிவுகள் இயற்கையாக ஒன்றில் இருந்து ஒன்றாக விரிந்து வந்தவை. அவற்றின் முதற்படியில் நிற்கும் இவ்வுயிர் நிலைத்திணை வகையின.

இதனை மூவாயிரம் ஆண்டுகளின் முன்வாழ்ந்து இலக்கணம் செய்த தொல்காப்பியர் தெளிவாகக் கூறுகிறார். இப்பொழுது அறிவியல் வல்லார் அவ்வுண்மையைக் கண்டு நிலை நாட்டியிருக் கின்றனர். அத்தகையருள் முதல்வர் சகதீசந்திரபோசு என்பார்.

அவர் உலகப் புகழ் பெற்றது போல், தொல்காப்பியரும் முற்படவே உலகப் புகழ் பெற்றிருக்க வேண்டும். அச்செய்தியை நாம் உலகுக்குத் தரவில்லை: நம்மவர்கள் கண்டு பிடித்த அரிய அறிவியல்களை யெல்லாம் பின்பற்றி ஆய்வு செய்யவும் உலகப் பரப்புதல் செய்யவும் வேண்டியது நம்மவர் கடமை என்றேன்! கூர்ந்து கேட்டான்! நல்ல அறிவாளி! வழிகேட்கவா உணவு விடுதியில் உசாவவா, தங்கல் விடுதியைக் கேட்டு வழிகாட்டவா எல்லாவற்றிலும் முற்பட நின்று உதவுபவன் அவன்! அவனுக்குத் தான் மொழிச் சிக்கல் இல்லையே! பத்துவயது! ஐந்தாம் வகுப்புப் படிப்பவன்!

வேலாயுதரும் ஓட்டுநரும் எய்தினர்! வண்டி ஓடியது! சோத்பூர் 8 மணியளவில் சேரவாய்க்கும் எனச் சென்றால் மணி ஒன்பதையும் தாண்டிவிட்டது. தாமோதரனார் நாங்கள் வருதல் பற்றியும் இடம் புற்றியும் அறிந்து கொண்டு இருத்தலால் அவர் சொல்லிய இடத்தில் வண்டியை நிறுத்தியும் நிறுத்தாமலும் உள்ள போதே அவர்கண்டு கையைக் காட்டி அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். 9.30 -க்கு மேல் ஆயிற்று.

தாமோதரனார் பெயரைக் கேட்ட அளவில் என் அகக் கண்ணில், அரிய பதிப்புகள் செய்த அறங்கூறவைய நடுவர் சி.வை. தாமோதரனார் நின்றார்! அவரைப் பரிதிமால் கலைஞர் பாடிய அரிய பாடல்களும் நினைவில் எழுந்தன. திரு.வி.க. பாராட்டிய பாராட்டும் நிமிர்ந்தது! அவர் துணையைப் பற்றி அருள், 'அங்கே ஓர் அருள் பேத்தி இருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள் அவ்வளவு அன்பினர்; உடன்பிறப்புப் போன்ற பாசத்தர்" என்றார்!

நேரில் அவரைப் கண்டதும் அதனை அப்படியே மெய்ப்பிப்பார் போலச் சாரலைத் தம்மகனைப் போலவே தழுவி அணைத்துக் கொண்டதும், அளவளாவியதும் கண்டு மகிழ்ந்தேன்! அவரைப் போலவே இனியர்! ஓராணும் ஒரு பெண்ணுமென